
உண்மையில், சிங்காய்-திபெத் ரெயில்பாதை, திபெத் மக்களுக்கு ஏற்படுத்தும் மாற்றம், மேற்கூறிய இரண்டு எடுத்துக்காட்டுகளுடன் நின்று விடவில்லை. சிங்காய்-திபெத் ரெயில்பாதை, போக்குவரத்தில் இறங்கியிருப்பது, பாரம்பரிய திபெத் பண்பாட்டினை, திறப்புப் பணியின் முன்வரிசையில் நிறுத்தி, மேலும் அதிகமான திபெத் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றும் என எதிர்பார்க்கலாம் என்று திபெத் சமூக அறிவியல் ஆய்வகத்தின் பொருளாதாரத் துறையின் துணைத் தலைவர் வாங் டே யுன் கருத்து தெரிவித்தார்.
"கடந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அடைபட்டிருந்த, உற்சாகமற்ற பண்பாட்டை இந்த ரெயில்பாதை போக்குவரத்து மாற்றி விட்டது. திபெத்திலுள்ள பண்பாடு, இதர பிரதேசங்களின் மற்ற தேசிய இனங்களின் பண்பாட்டுடன், மேலும் நன்றாகவும் விரைவாகவும் தொடர்பு கொள்ளலாம். அன்றி, குறிப்பிட்ட அளிவில் தேசிய இனப்பண்பாட்டு இசைவும் காணப்படலாம். குறிப்பாக, திபெத்துக்கு போய்வருவோர் அதிகரிப்பதுடன், வெளிப்புறத்திலிருந்து வருவோரின் கருத்து, சிந்தனை மற்றும் மதிப்பீடுகளினால், திபெத்திலுள்ளவர்களின் வாழ்க்கை முறையும், மத நம்பிக்கையை மையமாகக் கொண்ட பழைய சமூகப் பண்பாடும் மாறும் வகையில் தாக்கம் ஏற்படலாம்" என்றார், அவர்.

ரெயில்பாதை போக்குவரத்தினால், திபெத்துக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை, கணிசமாக அதிகரிக்கும். தற்போது, நாள்தோறும் 4 ரெயில்வண்டிகள் திபெத்துக்கு வருகின்றன. ஒவ்வொரு ரெயில்வண்டியிலும் சுமார் ஆயிரம் பேர் வருகின்றனர். ஒரு நாளில் ரெயில் மூலம் திபெத்துக்கு வருவோரின் எண்ணிக்கை நாலாயிரம் ஆகும் என்று கூறலாம். அன்றி, விமான மூலம் வருவோரை சேர்த்து, நாள்தோறும் மொத்தம் ஐயாயிரம் பேர் திபெத்துக்கு வருகின்றனர். நாளுக்கு இரண்டு மடங்குக்கு மேலான பயணிகளை திபெத் வரவேற்கின்றது. இத்தகைய நிலைமையில், திபெத்திலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க கட்டடங்களை எவ்வாறு பராமரிப்பது என்பது கவலை தரும் பிரச்சினையாகின்றது என்று இந்நிபுணர் சுட்டிக்காட்டினர்.
லாசாவிலுள்ள பண்டைக்கால கோயிலான Da Zhao Si கோயிலின் லாமா நிமாஜிங்லன், இத்துறையில் நடவடிக்கை மேற்கொள்ளத் துவங்கியிருக்கின்றார். ரெயில்வண்டிகளில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தற்போது, அவர், ரெயில்பாதை பகுதிகளுடன் ஒத்துழைக்க திட்டமிட்டுள்ளார் என்று அவர் எமது செய்தியாளருக்குத் தெரிவித்தார். 1 2 3
|