• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-11 08:50:23    
புமிங் இன துவக்க நிலைப் பள்ளி

cri

லேங் பின் மாவட்டம்

புமிங் இனம், சீனாவில் குறைவான மக்கள் தொகையுடைய தேசிய இனங்களில் ஒன்றாகும். 30 ஆயிரத்துக்குட்பட்ட மக்கள் தொகையுடைய இவ்வினம் முக்கியமாக தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தின் லேங் பின் மாவட்டத்தில் குழுமி வாழ்கின்றது. பொருளாதாரம், பின்தங்கிய நிலையில் இருப்பதினால், புமிங் இனத்தினர் கல்வி கற்பதற்கு சரியான வசதிகள் இல்லை. தவிரவும், பள்ளி வயது அடைந்த பல குழந்தைகள் பள்ளிக்குப் போக முடியவில்லை. அல்லது பாதியிலேயே பள்ளிப் படிப்பை விட வேண்டியிருந்தது. கடந்த சில ஆண்டுகளில், சீன அரசின் பேருதவியுடன் கல்வி வசதி பெரிதும் மேம்பட்டு, இக்குழந்தைகள் அனைவரும் பள்ளிக்குத் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

கன்சு ஹெங் என்னும் துவக்கப்பள்ளியின் முதல்வர், புமிங் இனத்தைச் சேர்ந்த ஸ்யோ யு வென் அவர் இம்மாற்றத்தை நேரில் கண்டார்.

நாள்தோறும் அதிகாலையில் அவர் எழுந்து, பள்ளியில் தங்கிப்படிக்கும் மாணவர்களுக்கான உணவைத் தயாரிக்கும் சமையல்காரருக்கு உதவி செய்கின்றார். வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ள சிறிய உணவு விடுதியில், புத்தம் புதிய மேசைகள்-நாற்காலிகள் வரிசையாக போடப்பட்டுள்ளன. இச்சிறிய உணவு விடுதி பற்றிக் குறிப்பிடுகையில், முதல்வர் பெருமைப்பட்டு கூறியதாவது:

"மேசைகளும் நாற்காலிகளும் புதியவை. எட்டு பேர் ஒரு மேசையில் சேர்ந்து உட்கார்ந்து உட்கொள்கின்றனர். மொத்தம் 24 குழந்தைகள் மூன்று மேசைகளில் சாப்பிடுகின்றனர்" என்றார்.

கன் சு ஹெங் துவக்க நிலைப்பள்ளியில் மொத்தம் 150க்கும் மேலான மாணவர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒரு பிரிவினரின் வீடுகள் தொலைவில் இருப்பதால், அவர்கள் பள்ளியில் தங்கிப்படிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கையை மேலும் நன்றாக பராமரிப்பதற்காக, அண்மையில் இச்சிறிய உணவு விடுதி தொடங்கப்பட்டது. இதற்கு முன், அவர்களின் உணவுப் பிரச்சினையை அவர்களே சமாளித்தனர். பல குழந்தைகள், வகுப்பு முடிந்ததும் செய்ய வேண்டிய முதல் பணி, சமையலாக இருந்தது.

1  2  3