• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-11 08:50:23    
புமிங் இன துவக்க நிலைப் பள்ளி

cri

புமிங் இன பெண்கள்

உணவு சம்பந்தமான பிரச்சினை, முன்பு இப்பள்ளியை எதிர்நோக்கிய பல பிரச்சினைகளில் ஒன்றாகும். சாங் மின் என்பவர், லேங் பின் மாவட்டத்திலிருந்து வரவழைக்கப்பட்ட ஒரு ஆசிரியர். அவர் இப்பள்ளிக்கு வந்து ஓராண்டுக்கு மேலாகியது. அவனுடன் சேர்ந்து வேறு பல ஆசிரியர்களும் கன் சு ஹெங் துவக்க நிலைப் பள்ளியின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காகவே, வரவழைக்கப்பட்டுள்ளனர். இது லேங் பின் மாவட்ட அரசு மேற்கொண்ட ஒரு நடவடிக்கை.

இந்த ஆசிரியர்கள், ஈடுபாட்டுடன் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கின்றனர். இருப்பினும், உறைவிட வசதி சரிவர இல்லாததால், முதல்வர் ஸ்யோ யு வெங்க்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் சாங் மின் செய்தியாளரிடம் கூறியதாவது:

"இங்குள்ள வாழ்க்கைச்சூழல் மோசமாக இருந்தது. இரவில் தூங்கும் போது அதிக எலிகள் ஓடின" என்றார்.

இப்போது, இந்நிலைமை மாறி விட்டது. அரசு ஒதுக்கீடு செய்த நிதி அதிகரிப்புடன், பள்ளிக்கு அருகில் இரண்டு மாடி கட்டிடம் மும்முரமாகக் கட்டப்பட்டுள்ளது. செப்டம்பர் திங்களில், ஆசிரியர்கள் இதில் குடியேறலாம்.

57 வயதான ஸ்யோ யு வெங், இப்பள்ளி மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டுள்ளார். இப்பள்ளியிலேயே அவர், தமது துவக்க நிலை கல்வி பயின்றார். அப்போதைய கன் சு ஹெங் துவக்க நிலைப்பள்ளியில், மரத்தட்டிகளால் பிரிக்கப்பட்ட வகுப்பு அறைகள் மட்டும் இருந்தன. குளிர்காலத்தில் காற்று உள்ளே வீசியது. கோடைகாலத்தில் மழை நீரும் கசிந்தது. எதிர்காலத்தில் என்றாவது ஒரு நாள் இந்தப் பள்ளியை மேலும் நன்றாகப் பராமரிக்க வேண்டும் என்று தமது மனதிற்குள் உறுதிபூண்டார். சிரமப்பட்டு முயற்சி செய்ததால், அவர், அங்குள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர்ந்தார். படித்த காலத்தில், குழந்தை பருவக் கனவை நிறைவேற்ற அவர் பாடுபட்டு படித்தார்.

1  2  3