• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-11 08:50:23    
புமிங் இன துவக்க நிலைப் பள்ளி

cri

புமிங் இன மங்கை

"எங்களின் இவ்விடத்தில் மிகவும் வறுமை. படித்தவர்கள் மிகவும் குறைவு என்பது, இதற்குக் காரணம் என நான் நினைத்தேன். பொது மக்கள், தலைமுறை தலைமுறையாக ஆட்டு மேய்ச்சலிலும், பயிரிடுவதிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலைமை தொடர்ந்தால், எங்கள் ஊரில் மேலும் வறுமை ஏற்பட்டு விடும். வளர்ச்சி இருக்காது" என்று அவர் சொன்னார்.

1995ம் ஆண்டு, வெளிப்புறத்திலிருந்து தம் ஊருக்குத் திரும்பிய ஸ்யோ யு வெங் விருப்பப்படி கன் சு ஹெங் துவக்க நிலைப்பள்ளியின் முதல்வரானார். பள்ளியில் ஏற்பட்டுள்ள மாற்றம், நன்றாகப் பணிபுரிய வேண்டும் என்ற அவரது மன உறுதியைத் திடமாக்கியது.

"நான் பள்ளிக்குத் திரும்பிய பின், இப்பள்ளி முன்பை விட முன்னேற்றமடைந்துள்ளதைக் கண்டறிந்தேன். சில பல்கலைக்கழக மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். சிலர், சீனியர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது எனக்கு மகிழ்வினைத் தந்தது. அடுத்த தலைமுறையினரில், மேலும் அதிகமானோர் பல்கலைக்கழகத்தில் சேர வேண்டும். கூடுதலான திறமைச்சாலிகள் இருக்க வேண்டும். எங்கள் ஊருக்கு இது நன்மை பயக்கும்" என்றார்.

புமிங் இனத்தவர்கள்

சீன அரசு வெளியிட்ட, "இரண்டு விலக்கு, ஒரு உதவித்தொகை" என்ற கொள்கை, ஸ்யோ யு வெங்கின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது. இக்கொள்கையின் படி, மிகவும் வறிய குடும்பத்தின் மாணவர்களுக்கு புத்தகக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை விலக்கி, அவர்களுக்கு குறிப்பிட்ட அளவு உதவித் தொகையை வழங்குகின்றது. சீனாவில் இலவச கல்வி கட்டத்தின் படி கட்டணம் கட்ட வேண்டாம். இருப்பினும், பாடநூல் கட்டணமும் இதர கட்டணங்களும் தேவைப்படுகின்றன. லேங் பின் பிரதேசம், முக்கியமாக வறுமை ஒழிக்கப்பட வேண்டிய மாவட்டங்களில் ஒன்றாகும். பல மாணவர்கள், மேற்கூறிய இரண்டு செலவுகளைக் கொடுக்க முடியாமல் பாதியிலேயே பள்ளியை விட்டு போக வேண்டி ஏற்பட்டது.

13 வயதான யி செள ஜியாங், மூன்றாம் வகுப்பின் போது குடும்ப இன்னல் காரணமாக பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போனது. வகுப்புக்கு மீண்டும் வரும் ஒரு நாளுக்காக அவர் மிகவும் எதிர்பார்த்திருந்தார்.

"நான் வீட்டில் இரண்டு திங்கள் தங்கியிருந்தேன். வீட்டில் இருந்த போது நூல்களைப் படித்தேன். அல்லது மலைகளில் ஏறி மாடு மேய்த்தேன். பணம் இருந்தால், மற்ற மாணவர்களைப் போலவே, நானும் தொடர்ந்து படிக்க முடியும் என நினைத்தேன்" என்றார்.

அவரது விருப்பம் விரைவில் நனவாகி விட்டது. அரசின் கொள்கையின் படி அனைத்து கட்டணங்களும் விலக்கப்பட்டன. திங்கள்தோறும் அவருக்கு 40 யுவான் உதவித் தொகை வழங்கப்படுகின்றது. லேங் பின் மாவட்டத்தில் மொத்தம், 18000 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.


1  2  3