• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-25 12:18:46    
குர்க்ஜி இன எல்லை காவல் பணியாளர்

cri
வட மேற்கு சீனாவின் சிங்கியாங் விகுர் தன்னாட்சிப் பிரதேசத்தின் அ டூஷி நகரின் து கு மே தி வட்டத்துக்கும், கிர்கிஸ்தான் குடியரசுக்குமிடையில் 100 கிலோமீட்டருக்கு அதிகமான எல்லை கோடு கிடக்கின்றது. இங்கு எல்லைக் காவல் படையின் அதிகாரிகளும் போர்வீரர்களும் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். குர்க்ஜி இனத்தின் ஆயர்கள் பலரும் எல்லை காவல் பணியாளர்களாக உள்ளனர். இன்று அவர்களில் ஒருவரான ஊஸ்மே பற்றி கூறுகின்றோம்.

துகுமே தி வட்டத்து யிடலேங் கிராமத்தைச் சேர்ந்தவர் உஸ்மே, அந்தக் கிராமத்தில் மொத்தம் 9 எல்லை காவல் பணியாளர்கள் இருக்கின்றனர். 50 வயதுக்கு மேலான உஸ்மே, அவர்களில் மூத்தவர். எல்லை காவற்நிலையத்தின் பணியாளர்களுக்கு உதவி அளித்து, எல்லைப் பிரதேசங்களில் கண்காணித்து, மனிதரும் கால்நடைகளும் எல்லையைக் கடக்காமல் தடுத்து நிறுத்துவது, அவரது முக்கிய பணியாகும். அவர் கூறியதாவது:

"எனது தந்தை முதல் மூன்று தலைமுறையினர்கள் எல்லைக்காவலில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, காவல் புரிவதில் எனது மக்களுக்குப் பயிற்சி அளிக்கின்றேன்" என்றார்.

உஸ்மே 16வது வயதிலிருந்தே தனது தந்தையுடன் புட்முனக் கணவாயைக் காவல் காக்கத் துவங்கினார். கடல் மட்டத்திலிருந்து சுமார் ஐயாயிரம் மீட்டர் உயரமான இக்கணவாயில் சுற்றுச்சூழல் மிகவும் மோசம். கோடைக்காலத்திலும் சில வேளையில் தட்ப வெப்ப நிலை பூஜ்யத்துக்குக் கீழ் 20 டிகிரியாக இருக்கின்றது. இக்கணவாயில் காவல் புரிந்து 26 ஆண்டுகள் உருண்டோடின. இதற்கிடையில் அவர் சந்திக்க இன்னல்கள் பற்றி பேசுவதற்கில்லை. என்றாலும் அவர் சந்தித்த ஆபத்து தெரிய வேண்டும்.

1  2  3