• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-25 12:18:46    
குர்க்ஜி இன எல்லை காவல் பணியாளர்

cri

கண்காணித்துச்செல்லும் போது, உஸ்மே, அடிக்கடி காவற்துறையினருடன் இணைந்து பணிபுரிகின்றார். அவர்கள், வெவ்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள். விழா நாட்களெல்லாம், உஸ்மே, அவர்களை தம் வீட்டிற்கு விருந்தினர்களாக வரவழைக்கின்றார். தவிரவும் கொல்லப்பட்ட ஆடுகளையும் காவல் நிலையத்துக்குக் கொண்டு போகின்றார். காவற்துறையினர்களும் உஸ்மேயை உறவினராகக் கருதுகின்றனர். காவற்துறையினர் ய லே கன் கூறியதாவது:

"எங்கள் எல்லை காவல் பணியாளர் உஸ்மே, எங்களுக்கு இன்னல் ஏற்பட்ட போது உதவி செய்கின்றார். அடிக்கடி நாங்கள் மனமுருகுகின்றோம்" என்றார்.

கண்காணிப்பு போக்கில், திடீரென வியற்று வலி ஏற்பட்ட ய லே கன் குதிரையிலிருந்து கீழ் விழுந்தார். உஸ்மேயும் மற்ற ஒரு காவல் பணியாளரும் ஒரு நாள் நடந்து, அவரை, மலையின் அடிவாரத்திலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர். அவருக்கு, குடல் முனை வீக்கம் என்ற நோய் ஏற்பட்டது. கொஞ்சம் தாமதமாக மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால், அவருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். உஸ்மேயும் பிறரும் தமது உயிரைக் காப்பற்றியதாக ய லெ கன் கூறி பாராட்டினார்.

கடந்த 26 ஆண்டுகளில், புட்முனக் கணவாய் எல்லைக் கோட்டில், புல் கூட வளராத பீடபூமி உறைபனி நிலத்தில், செங்குத்தான மலைகளில், குதிரைகளும் நடக்க விரும்பாத பாதைகளில் அவர் அடிச்சுவடுகளை பதித்துள்ளார். ஒரு முறை, கன உறைபனி பெய்ந்து கொண்டிருக்கையில் அவர் கண்காணித்த போது குதிரை மீதிருந்து கீழ் விழுந்தார். உறைபனியால் மூடிமறைத்தது. இறுதியில் அவரது மனைவி அவரை தேடிக் கண்டுபிடித்து வீட்டிற்கு கொண்டு போனார்.

உஸ்மேக்கு 5 மகன்கள் உள்ளனர். இளம் மகன் அவரை போல் எல்லை காவல் பணியாளராக இருக்கின்றார். 6வது வயதிலிருந்தே உஸ்மேயுடன் இணைந்து பணியில் ஈடுபடத் துவங்கினார். கடந்த பல்லாண்டுகால பணிப்போக்கில் அவருக்கும் அசாதாரண அனுபவம் கிடைத்துள்ளது.


1  2  3