• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-25 12:18:46    
குர்க்ஜி இன எல்லை காவல் பணியாளர்

cri

19 ஆண்டுகளுக்கு முன் உஸ்மே தம் குடும்பத்தினர்களுடன் மலையில் வலம் வந்து கொண்டிருக்கையில், திடீரென பெரும் உறைபனி பெய்யத் துவங்கியது. 7 குடும்பத்தினர்களும் இம்மலையில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வர வர உறைபனி பெரிதாகி கொண்டே போக, அனைவரும் தத்தளிக்கின்றனர். பீடபூமியில் நீண்டகாலமாக வசித்து வந்துள்ள உஸ்மேவுக்கும் கையாளும் முறை தெரியாமல் போயிற்று. 5வது நாளில் குடும்பத்தினர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து விட்டனர். அப்போது விமான ஒலி கேட்டது. உஸ்மேவின் மனைவி கிகுர் லுஜிங் நினைவுகூர்ந்ததாவது:

"இத்தருணத்தில் அரசு ஹெலிகப்டரை ஏவி எங்களுக்கு உணவும் கால்நடைகளுக்கு தீனியும் வழங்கியது. இவ்வாறு நாங்கள் காப்பாற்றப்பட்டோம்" என்றார்.

உஸ்மே குடும்பம், உறைபனியில் சிக்கிக்கொண்ட செய்தியை அறிந்ததும் சிங்கியாங் ராணுவ வட்டாரம் உடனடியாக ஹெலிகப்டரை ஏவி அவர்களைக் காப்பாற்றியது, அறியத்தக்கது.

"எனவே, நான் அரசுக்கு நன்றி கூற வேண்டும். இறுதி துளி ரத்தம் இருக்கும் வரை, நான் பணியைச் செவ்வனே செய்ய வேண்டும்" என்று உஸ்மே கூறினார்.

ஒவ்வொரு ஆண்டின் ஜுன், ஜூலை திங்கள், உஸ்மே மிகவும் மும்முரமாக பணி புரியும் நேரமாகும். ஏனெனில், கோடைகாலத்தில் கால்நடை வளர்ப்பு பண்ணை திறந்து வைக்கப்பட்டதும், பலர், புட்முனக் கணவாய்க்குச் சென்று மேய்ச்சலில் ஈடுபடுவார்கள். ஆடுமாடுகள், எல்லையைக் கடக்கக்கூடும். இதை தவிர்க்கும் வகையில், உஸ்மே ஆயர்களிடையே பிரச்சாரம் செய்கின்றார்.

புட்முனக் கணவாயின் புவிநிலை சிக்கல் மற்றும் பிராணவாயு குறைவால், சாதாரண மக்கள் இதில் ஏறுவது மிகவும் கடினம். எனவே, கணவாயைக் கடந்து எல்லையைத் தாண்ட முயல்வோர் இருக்கின்றனர். கடந்த ஆண்டு மே திங்கள் ஒரு நாளில், வீடு திரும்பவிருந்த உஸ்மே திடீரென சாலையில் இனம் தெரியாதவர்கள் சிலரைக் கண்டு அறிந்தார். அவர்கள், எல்லைக் கடந்து செல்ல எத்தனிக்கின்றனர் என்று கடந்த பல்லாண்டுகால அனுபவம் அவருக்கு உணர்த்தியது. இத்தகவலை எல்லை காவல் நிலையத்துக்கு தெரிவித்தார். காவற்துறையினர்கள், புட்முனக் கணவாயில் எல்லையைக் கடக்க முயன்ற இரண்டு பேரைக்கைது செய்தனர். கடந்த சில ஆண்டுகளில், உஸ்மே காவற்துறையுடன் சேர்ந்து எல்லையைக் கடக்க முயலும் ஐயத்துக்குரிய 35 பேரைக் கைது செய்தார்கள்.

1  2  3