• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-23 14:05:56    
ரஷிய ஆசிரியை Katysha

cri

24 வயதான ரஷிய மங்கை Katysha வட கிழக்கு சீனாவின் Heilongjiang மாநிலத்தின் He Gang நகரில் உள்ள ஆசிரியர் பள்ளி ஒன்றில் ரஷிய மொழி ஆசிரியையாக பணிபுரிகிறார். கடந்த ஆண்டு, தனது சொந்த ஊரான ரஷியாவின் தொலை கிழக்கு மாநிலத்திலிருந்து, He Gang நகருக்கு அவர் வந்தார். இப்போது, Katyshaவின் வாழ்க்கை எப்படி?

Katysha மிகவும் அழகானவர். செய்தியாளரைச் சந்தித்த போது அவர் பேசுகையில், காலநிலையைத் தவிர, உணவு பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட விடயங்களில் He Gang, ரஷியாவிலிருந்து வேறுபட்டது. ஆனால், உள்ளூர் மக்களின் பேரார்வம், கருணை ஆகியவற்றால், இந்நகர் மீது தனக்கு விரைவாக அன்பு ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

"He Gang நகர் எனக்கு மிகவும் பிடிக்கிறது. இது, மிக அழகான நகர். இங்கு வந்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். இங்குள்ள மக்கள் மிகவும் சிறப்பானவர்கள். இங்கு பணியாற்றி, வாழ்வதை விரும்புகின்றேன்." என்றார்.

Katyshaவின் ஊர், தொலை கிழக்கு மாநிலத்தின் பிரோபிட்சான் நகர், தென் கிழக்கு ரஷியாவில் அமைந்துள்ளது. 1999ஆம் ஆண்டில், He Gang நகரும், தொலை கிழக்கு மாநிலமும் நட்புறவை உருவாக்கின. சிறு வயதிலேயே சீனா மீது Katysha ஆர்வம் கொண்டார். 6 ஆண்டுகளுக்கு முன், அவருக்கு வயது 18. அப்போது, அவருடைய தந்தையின் ஒரு சீன நண்பர் அவரின் வீட்டுக்கு வந்து, சீனாவின் வரலாறு மற்றும் பண்பாடு பற்றி அவரிடம் விவரித்தார். அதை கேட்ட பின் Katyshaவிற்கு உடனடியாக சீனாவின் மீது ஆர்வம் ஏற்பட்டது.

பின்னர், தந்தையின் இந்த நண்பரிடமிருந்து சீன மொழியை Katysha கற்றுக்கொண்டார். "Jiang Hong", அவரின் சீன மொழி பெயர். Hong என்றால், சீன மொழியில் "வானவில்" என பொருள். எதிர்காலத்தில் வானவில் போன்ற பாலத்தை உருவாக்கி, ரஷிய-சீன பண்பாட்டுத் தூதராக மாற அவர் விரும்புகின்றார்.

மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் போது, சீன மொழியில் மாணவர்களுடன் அவர் அடிக்கடி தொடர்பு கொள்கின்றார். அவர் ரஷிய உச்சரிப்பில் பேசுகின்ற போதிலும், அவர் பேசுவதை மாணவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

1  2  3