• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-23 14:05:56    
ரஷிய ஆசிரியை Katysha

cri

Katyshaவுக்கும், அவரின் மாணவர்களுக்கும் இடையே வயது வித்தியாசம் சில ஆண்டுகள் மட்டுமே. இதனால், அவருக்கும் மாணவர்களுக்கும் இடையே பல ஒத்த ஆர்வங்கள் உள்ளன. அவரும், மாணவர்களும் ஓராண்டு காலம் மட்டும் பழகிய போதிலும், இந்த அழகான ரஷிய ஆசிரியை மாணவர்கள் நேசிக்கின்றனர். Guan Yu என்னும் மாணவர் கூறியதாவது:

"எங்களிடையே, தலைமுறை இடைவெளி ஏதும் இல்லை. நாங்கள் இயல்பாக உரையாட முடிகிறது. தனது ஊர், தனது நாட்டில் நகைச்சுவையான விஷயங்கள் ஆகியவை பற்றி அவர் அடிக்கடி எங்களிடம் கூறுகிறார்." என்றார்.

நடைமுறை வாழ்க்கை நிகழ்வுகளை இணைத்து, மாணவர்களுக்கு ரஷிய மொழியை Katysha கற்றுக்கொடுக்கிறார். எடுத்துக்காட்டாக, பொருட்களை வாங்குவது பற்றி அவர் கற்பிக்கும் போது, அவர் மாணவர்களை பேரங்காடிக்கு அழைத்து சென்று, ஒவ்வொரு பொருளுக்கும் ரஷிய மொழியில் என்ன பெயர் என்பதை மாணவர்களுக்கு கற்பித்தார். இந்த தெளிவான கற்பிப்பு முறை, மாணவர்களுக்கிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ரஷிய மொழியைக் கற்பது, மகிழ்ச்சி தருகின்றது. Liu Fa Lian என்னும் மாணவி செய்தியாளரிடம் கூறியதாவது:

"ஆசிரியர் Katyshaவின் ரஷிய மொழி வகுப்பு செயலாக்க முறையில் அமைந்தது. மொழி, சைகை, படம் ஆகிய முறைகளின் மூலம், சொற்களை அவர் கற்பித்தார். இம்முறையில் நாங்கள் விரைவாக கற்றுக்கொள்கின்றோம்." என்றார்.

குழந்தைப் பருவத்தில் இருந்தே, Katysha நுண் கலைகளை விரும்புகின்றார். பல்கலைக்கழகத்தில் எண்ணெய் ஓவிய கலையை அவர் கற்றுக்கொண்டார். He Gangவில் ஓவியம் மூலம் மாணவர்களுக்கு ரஷிய பண்பாட்டை அவர் காட்டுகின்றார். சீனாவில் தாம் கண்டுள்ள அனைத்தையும் அவர் ஓவியங்களாக தீட்டினார். அவரின் விடுதியின் சுவரில் அவரின் ஓவியப் படைப்புகள் தொங்க விடப்படுகின்றன. பெருஞ்சுவர், அழகான Songhuajiang ஆறு, எழில் மிக்க ஏரிகள் ஆகிய ஓவியங்கள் உள்ளன.

ஓய்வு நேரத்தில், மாணவர்களுடன் இணைந்து பட்டம் விட Katysha விரும்புகின்றார். சில சமயங்களில், தனக்கு சீனப் பாடல்களை கற்றுக்கொடுக்குமாறு தனது மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

1  2  3