
கவலையேதுமற்ற Katysha பள்ளியில் சீன சக பணியாளர்களுடன் நன்றாக பழகுகிறார். சீனாவின் பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்கள் பற்றி சக பணியாளர்கள் அவரிடம் விவரிக்க விரும்புகின்றனர். இந்த அழகான ரஷிய சக பணியாளரை அவர்கள் நேசிக்கின்றனர். பள்ளியில் Zhao Hai Yan என்னும் ஆசிரியை செய்தியாளரிடம் கூறியதாவது:
"எங்கள் துறையில் அனைத்து ஆசிரியர்களுடனும் அவர் சுமுகமாக பழகியுள்ளார். அவருடன் பழகியதில், அவர் அன்னியர் அல்ல என நாங்கள் உணர்கின்றோம். அவரை, எங்கள் சிறு தங்கையாக கருதுகின்றோம்." என்றார்.

தனது சீன மொழி நிலையை மேம்படுத்த, Katysha பாடுபடுகின்றார். பழக்குடையவர்களை சந்திக்கும் போது, Katysha சீன மொழியில் அவர்களை வரவேற்று பேசுகிறார். அவரின் வீட்டில், கோப்பைகள் தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றில் சீன எழுத்துகளின் labelகள் ஒட்டப்படுகின்றன. இதன் மூலம் அன்றாட வாழ்க்கையில் சீன மொழியை அவர் அவ்வப்போது கற்றுக்கொள்ளலாம். தற்போது, சீன மொழியில் உள்ளூர் மக்களுடன் அவரால் பேச முடியும்.
ஓராண்டுக்கு பின், Katysha தனது தாய்நாட்டுக்கு திரும்புவார். சீனாவில் பணிக் கால வரம்பை நீட்டிக்க அவர் விரும்புகின்றார். அவர் கூறியதாவது:
"சீனாவை மிகவும் விரும்புகின்றேன். சீனாவுக்கு வருவது என்பது, என் மனதில் ஒரு அழகான கனவு. சீனாவை, என் இரண்டாவது சொந்த ஊராக கருதுகின்றேன். இங்கே நான் இருக்க வேண்டிய தேவை ஏற்படுமானால், தொடர்ந்து தங்குவேன். சீனாவில் தொடர்ந்து பணி புரிவேன்" என்றார்.
இவ்வாண்டு, சீனாவில் ரஷிய ஆண்டு என்ற நடவடிக்கை கொண்டாடப்படுகின்றது. சில நாட்களுக்கு முன், Katyshaவின் ஊரான ரஷியாவின் தொலை கிழக்கு தன்னாட்சி மாநிலத்தின் அரசு பிரதிநிதிக்குழு He Gang நகரில் பயணம் மேற்கொண்டது. சொந்த ஊரின் நண்பர்களை Katysha சந்தித்தார். தமது சீன மாணவர்கள் ரஷிய மொழியை கற்றுக்கொள்ள பாடுபட வேண்டும் என்றும், அடுத்த ஆண்டு, ரஷியாவில் சீன ஆண்டு என்ற நடவடிக்கை நடத்தப்படும் போது, தனது ஊருக்கு சீன மாணவர்களை அழைத்து வர வேண்டும் என்றும் Katysha விருப்பம் தெரிவித்தார். 1 2 3
|