• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-30 14:51:49    
கட்டாய கல்வியைப் பரப்பும் சீன அரசின் முயற்சி

cri

பல பல நேயர்கள் சீனாவின் கிராமப்புறத்தில் வாழ்கின்ற மாணவர்களின் கல்வி பற்றி மிகவும் அக்கறை செலுத்தியுள்ளனர். மாணவர்கள் கல்வி பெறும் சூழ்நிலை, கல்விக் கட்டணம் செலுத்துவது ஆசிரியர்களின் பணி உயர்வு ஆகியவை பற்றி அவர்கள் வெவ்வேறான வினாக்களை எழுப்பியுள்ளனர். இன்றைய நிகழ்ச்சியில் அவர்களின் வினாக்களுக்கு விடையளித்து ராஜாராம், தி. கலையரசி இருவரும் பேசுகின்றனர்.

ராஜா......சீனா உலகில் மக்கள் தொகை மிக அதிகமான நாடு. துவக்கப் பள்ளிகளிலும் இடைநிலை பள்ளிகளிலும் 9 ஆண்டுகால கட்டாய கல்வித் திட்டம் நாட்டின் 95 விழுக்காட்டு பகுதிகளில் நடைமுறைபடுத்தப்படுகிறது. எஞ்சிய 5 விழுக்காட்டுப் பகுதிகள் எங்கே உள்ளன?என்ன நிலையில் உள்ளன?

கலை......நீங்கள் குறிப்பிட்ட 5 விழுக்காட்டு பகுதிகள் பொருளாதார வளர்ச்சி குன்றிய கிராமப்புறத்தில் உள்ளன. அந்தக் கிராமங்கள் எட்டாத் தொலைவில் இருப்பதால் பொருளாதார வளர்ச்சி குறைந்து ஏழை குடும்பங்களின் குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து படிக்க முடியாமல் உள்ளது.

ராஜா.....அப்படியானால் இந்த நிலையை சரிசெய்ய சீன அரசு கருத்தில் கொள்ள வில்லையா?குழந்தைகள் கல்வி பெறுவதை எவ்வாறு உத்தரவாதம் செய்வது? அவர்கள் தடையின்றி கட்டாய கல்வி பெற என்ன செய்யப்படுகின்றது?கொஞ்சம் விவரிக்கலாமா?

கலை......நீங்கள் ஒட்டுமொத்தமாக கூர்மையான வினாக்களை கேட்டு விட்டீர்கள். கிராம குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பள்ளியில் கல்வி பெறுவது பற்றிய உங்கள் வினாக்களுக்கு விடை அளிக்கின்றேன்.

ராஜா.....சரி. ஒவ்வொன்றாகச் சொல்லுங்கள்.

கலை......இது சீனாவில் வசந்த காலத்தின் கடைசிக் கட்டமாகும். வசந்த காலத்தில் பிபரவரி திங்களின் 28ம் நாள் பள்ளிகள் திறந்தன. சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள சுச்சான் மாநிலத்தின் ச்சௌச்சியா என்ற சிறுநகரில் உள்ள இடை பள்ளிகளிலும் துவக்க பள்ளிகளிலும் பாடம் துவங்க வேண்டும். குழந்தைகளுக்காக கல்விக் கட்டணம் செலுத்த பெற்றோர்கள் பணம் திரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியூட்டும் ஒரு செய்தி வந்தது. அதாவது இனிமேல் பாட நூல் கட்டணம் தவிரம் பல்வேறு கல்விக் கட்டணங்கள் செலுத்த வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டது.

1  2  3