
ராஜா.....அப்படியானால் ஒவ்வொரு மாணவருக்கும் எவ்வளவு செலவு குறையும்?
கலை.....ஓரு ஆண்டு கால கல்விக் கட்டணம் முன்பு இருந்ததை விட சில பத்துக்கும் அதிகமான யுவான் குறைக்கப்படும். பல மாணவர்களின் பெற்றோர்கள் இதை கேட்டு பரவசமடைந்தனர்.
துசிங் என்னும் பெற்றோர் கூறியதாவது
ராஜா......கட்டணம் குறைக்கப்படுவது நல்ல செய்தி எங்களுடைய சுமையை குறைப்பதற்கு இது துணை புரிந்தது. எனக்கு 3 குழந்தைகள் உண்டு. அவர்கள் முறையே 13வது வகுப்பிலும் 7வது வகுப்பிலும் துவக்க பள்ளி பயில்கின்றனர். அவர்களின் கல்வி கட்டணத்தை என்னால் தாங்க முடியாது.
கலை.....பெற்றோருக்கு மகிழ்ச்சியூட்டும் புதிய கொள்கையை சீன அரசு கடந்த ஆண்டின் இறுதியில் வகுத்தது. இந்த கொள்கையின் மூலம் சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள கிராமங்களில் கட்டாய கல்வியில் பயிகின்ற மாணவர்கள் அனைவருக்கும் கல்வி கட்டணம் விலக்கப்படும். இந்த கொள்கை அடுத்த ஆண்டில் சீனாவின் நடுபகுதி மற்றும் கிழக்கு பகுதி கிராமங்களுக்கும் விரிவாக்கப்படும். அப்போது முதல் சீனாவின் கிராமங்களிலுள்ள பள்ளிக்குச் செல்லும் 10 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் விலக்கப்படும்.
ராஜா....இந்த கொள்கை நடைமுறைக்கு வந்த பின் மாணவர்கள் எத்தகைய கல்வி கட்டணத்தை தொடர்ந்து செலுத்த வேண்டியிருக்கும்?
1 2 3
|