• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-30 14:51:49    
கட்டாய கல்வியைப் பரப்பும் சீன அரசின் முயற்சி

cri

கலை..... உண்மையிலே சீனாவில் துவக்க மற்றும் இடைநிலை பள்ளிக் கல்வியின் போது மாணவர்கள் கல்விகற்கத் தேவைப்படும் கட்டணத்தில் பாட நூல், வீட்டு பயிற்சி புத்தகம் மற்ற சில கல்வி கட்டணம் ஆகியவை மட்டுமே உள்ளன. ிதற்கு மொத்தம் 100 முதல் 200 யுவான் வரை செலவாகும். ஆனால் குறைவாக சம்பாதிக்கும் நகரவாசிகளுக்கும் வறுமைப் பகுதியிலுள்ள விவசாயிகளுக்கும் இந்த தொகை அதிகமாகும். கட்டணம் செலுத்த முடியாத நிலையில் குழந்தைகள் கல்வி வாய்ப்பை இழந்து வீட்டில் சும்மா இருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

ராஜா.....கடந்த சில ஆண்டுகளாக கல்வித் தரத்தை உயர்த்துவது என்பது மக்களின் கல்வியறிவை வளர்ப்பதற்கும் மக்கள் தொகை நெருக்கடியை திறமையாளர்களின் வளமாக மாற்றுவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சீன அரசு புரிந்து கொண்டது. படிப்படியாக கட்டாய கல்விக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தது. அத்துடன் பல்வகை நடவடிக்கைகளை மேற்கொண்டு கிராமப்புற கட்டாய கல்வியை பெரிதும் வளர்க்க பாடுபட்டுள்ளது. இது பற்றி கல்வி அமைச்சர் ச்சோ ச்சி கூறியதாவது

10வது ஐந்தாண்டுத் திட்டத்தில் கிராமப்புறக் கல்வி

நெடுநோக்குடன் மைய இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. கல்விக்கு ஒதுக்கப்படும் தொகையை முக்கியமாக கிராமப்புறத்தில் பயன்படுத்துவதென்று முடிவு எடுக்கப்பட்ட்து. பல முக்கிய பணித் திட்டங்களும் நிகழ்ச்சிகளும் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. கிராமக் கல்விக்கு முன்கண்டிராத முறையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையாக இதற்கான பணித் திட்டங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

கலை......ஆமாம். கட்டாய கல்வி வழங்கும் காலத்தில் மாணவர்களுக்கான பாட நூல் உள்ளிட்ட கல்வி கட்டணத்தை விலக்குவது, விடுதி மாணவர்களுக்கு உதவி வழங்குவது ஆகியவை கிராமப்புறத்தில் சீனா நடைமுறைபடுத்தும் கல்வி நடவடிக்கைகளில் முக்கிய பகுதியாகும். சீனாவின் தென் நேற்கு பகுதியிலுள்ள யூநான் மாநிலத்தின் கல்வி ஆணையத்தின் தலைவர் ஹோ தியென் சுன் கொள்கையின் நடைமுறையாக்கம் பற்றி கூறியதாவது.

ராஜா......2000ம் ஆண்டு முதல் யூநான் மாநிலத்தின் சில எல்லைப் புற வட்டாங்களில் பாட நூல் உள்ளிட்ட கல்விக் கட்டணம் விலக்கப்பட்டுள்ளது. பின்னர் எல்லைப் புறப் பகுதிகளுக்கு இந்த கொள்கை விரிவாக்கப்பட்டது. 2005ம் ஆண்டு வரை சுமார் 4 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் இதில் பயன் பெற்றுள்ளனர்.


1  2  3