• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-08 09:46:57    
யுன்னான் மாநிலத்தின் து லொங் இனம்

cri

தென் மேற்கு சீனாவில் உள்ள யுன்னான் மாநிலத்தின் து லொங் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் சுமார் 5800 பேர் மட்டுமே உள்ள து லொங் தேசிய இனம் வாழ்கின்றது. இவ்வினத்தவர்கள், து லொங் ஆற்றின் பூர்வகுடிகள். சீனாவில் மிகக்குறைவான மக்கள் தொகையுடைய தேசிய இனங்களில் ஒன்று. து லொங் இனத்தவர் பேசும் மொழிக்கு எழுத்துக்கள் இல்லை. இந்த இனம் பற்றிய வரலாற்று ஆவணங்களும் மிகக்குறைவு. 1949ம் ஆண்டு நவ சீனா நிறுவப்படுவதற்கு முன், து லொங் இனம், நாகரிகமற்ற சமுதாயமாக இருந்தது. 50 ஆண்டுகளுக்கு மேல் உருண்டோடி விட்டன. இப்போது இவ்வினத்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை அறிய, து லொங் கிராமம் ஒன்றுக்கு செல்வோம்.

மழை பெய்து கொண்டிருந்த காலை நேரம். கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் உள்ள Xiao Cha La என்னும் து லொங் இனக்கிராமத்திற்கு சென்றோம். வழியில் து லொங் இனத்தைச் சேர்ந்த Bai Yan Juan என்ற 18 வயது இள பெண்ணைச் சந்தித்தோம். மாவட்டத்தில் வசிக்கும் அவர், இப்போது, ஓய்வுக்காக ஊர் திரும்புகின்றார்.

இவ்வாண்டு உள்ளூர் ஆடல் பள்ளியில் பயின்று அவர் பட்டதாரியானார். மாவட்டத்தின் ஒரு தேசிய இன ஆடல்பாடல் குழுவில் அவர் பணி புரிகின்றார். இப்பணியை மிகவும் விரும்புவதாக, செய்தியாளரிடம் அவர் தெரிவித்தார்.

"எங்கள் இனத்தின் மக்கள் தொகை மிகவும் குறைவு. எங்கள் ஆடல் பாடல் குழு அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று அரங்கேற்றுகின்றது. இதனால், அனைவரும் எங்கள் தேசிய இனத்தின் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ளலாம். தவிரவும், எங்கள் இனத்தின் அழகு, ஆடை, அலங்காரம் ஆகியவற்றையும் அறிந்து கொள்ள முடியும். ஆனால், அவர்கள் எங்கள் இனத்தைப் பற்றி அவ்வளவு நன்றாகப் புரிந்து கொள்ள வில்லையே" என்றார்.

வயது குறைவு என்றாலும், அவர் கூறியதிலிருந்து அவர் பலவற்றை தெரிந்தவர் என்று தெரிகின்றது. அவருடன் பேசிக்கொண்டே நடந்தோம். பேசி பேசி மகிழ்ந்தோம். இரண்டு மணிநேரம் கழிந்து விட்டது. ஒரு சிறிய கிராமம் தென்பட்டது. து லொங் கிராமம் அடைந்தோம்.

1  2  3