
து லொங் பெண்கள்
Mu Jin Huaஉம் அவரது தம்பி Mu Cong Rongஉம் மலை அடிவாரத்தில் உள்ள இடைநிலைப்பள்ளியில் தங்கிப் படிக்கின்றார்கள். விடுமுறை காரணமாக, அவர்கள் இருவரும் வீடு திரும்பி, தமது பெற்றோருக்கு உதவியாக, வீட்டுக் காரியங்களைச் செய்கின்றனர்.
Mu Guang Ming குடும்பம், 5 பன்றிகளையும் சில கோழிகளையும் வளர்க்கின்றது. தவிரவும், மலைகளில் மருந்து மூலிகைகளைப் பறித்து மலை அடிவாரத்தில் உள்ள சந்தைகளில் விற்பதன் மூலம் வருமானம் ஈட்டுகிறது. ஆண்டு முழுவதும் வருமானம் சுமார் ஆயிரம் யுவானாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசின் சலுகைகள் காரணமாக, அவர்களைப் போன்ற குறைந்த மக்கள் தொகையுடைய தேசிய இனங்களின் பள்ளி வயதுடைய குழந்தைகள், கல்விக் கட்டணம் கட்ட தேவையில்லை. தவிரவும் உதவித்தொகையும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. எனவே, அவர்களின் வாழ்க்கை பரவாயில்லை. எமது செய்தியாளர், இக்குடும்பத்தினர்களுடன் சேர்ந்து தீ அடுப்புக்கு முன்னால் அமர்ந்து, கவர்ச்சிகரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்து மகிழ்ந்தார்.
நேரமாகி விட்டது. எமது செய்தியாளர்கள், இக்குடும்பத்தினர்களிடமிருந்து பிரியா விடை பெற்றனர். பின்னர், மு வே சிங் மூதாட்டியைப் பார்க்க சென்றனர்.
செய்தியாளர்களின் வருகையைக் கண்டு மூதாட்டி மிகவும் மகழ்ச்சி அடைந்தார். 50 ஆண்டுகளுக்கு முன், அவர், து லொங் சியாங் வட்டத்திலிருந்து இங்கு குடிபெயர்ந்தார். அப்போது, மிகப் பெரும்பாலான து லொங் இனத்தவர்கள் இவ்வட்டத்தில் கூடிவாழ்ந்தனர். இருப்பினும், அங்கு போக்குவரத்து வசதியாயில்லை ஆண்டில் பாதி நாட்கள் உறைபனியால் மலைகள் மூடப்படுகின்றன. சில திங்கள் மட்டுமே வெளியுலகுடன் தொடர்பு கொள்ளலாம். அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே ஊர் திரும்பினார். து லொங் வட்டத்தில் நெடுஞ்சாலை போக்குவரத்து இருப்பதென்ற செய்தியை அவருக்கு அறிவித்த பின் மூதாட்டி உணர்ச்சிவசப்பட்டு கூறியதாவது:
"போக்குவரத்து வசதியிருப்பதால், து லொங் வட்டத்துக்கு போய் உற்றார் உறவினர்களைப் பார்க்க விரும்புவதாக" கூறினார். 1 2 3
|