
து லொங் பெண்கள்
முதலில், கிராமவாசி Mu Guang Mingஇன் நாய் குரைத்தது:
உடனே குடும்பத்தினர் அனைவரும் வெளியே வந்து எங்களை வரவேற்றனர். தம்பதிகளும், இடைநிலைப்பள்ளியில் கல்வி பயிலும் இரண்டு மகள்களுமாக நால்வர், எங்களின் வருகையைக் கண்டு மகிழ்ந்தனர். து லொங் இனத்தவர்கள், மிகவும் விருந்தோம்பல்மிக்கவர்கள். வீட்டிற்கு வருகை தந்துள்ள விருந்தினர்களின் எண்ணிக்கையை தங்களின் நற்பண்புக்கு அடையாளமாகக் கருதுகின்றனர். நிறைய விருந்தினர்கள் வரும் இக்குடும்பம், நல்லெண்ணம் கொண்ட குடும்பம் என்று உணர்ந்து கொள்ளலாம்.
எமது செய்தியாளர் இவ்வீட்டை சுற்றிப்பார்த்தார். மரத்துண்டுகளால் கட்டப்பட்ட அறையில் கூரையிலிருந்து மழை நீர் கசிந்து கொண்டிருக்கின்றது. மரத்துண்டுகளினால் ஆன சுவரின் இடைவெளி மூலம் மங்கலான ஒளி உள்ளே நுழைகின்றது. அறையில் எளிமையான சாமான்கள். இருப்பினும், அறையின் ஒரு முறையில் புத்தம் புதிய தொலைக்காட்சிப் பெட்டி தெரிந்தது. வீட்டிலுள்ள இந்த முக்கிய மின் கருவி குறித்து Mu Guang Ming பெருமைப்பட்டுக் கொண்டார். அவர் கூறியதாவது:
முன்பு தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத நேரத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டுரசிக்கவில்லை. இரண்டு திங்களுக்கு முன் இதை வாங்கினேன். 20 அலைவரிசைகளைப் பார்க்க முடிகிறது என்றார்.
தொலைக்காட்சிப் பெட்டிக்கு தேவைப்படும் மின்சாரத்திற்காக, நகரில் 400 யுவானைக் கொடுத்து சிறிய நீர் மின் உற்பத்திக் கருவியை வாங்கியதாக அவர் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக, மலைகளில் விளையும் பொருட்களை விற்பனை செய்வதாலும், அரசின் வேளாண் வரி விலக்கு காரணமாகவும், கிராமவாசிகளின் வாழ்க்கை படிப்படியாக மேம்பட்டு வருகின்றது. Mu Guang Ming தவிர, வேறு சில குடும்பங்களும் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்கியுள்ளன.
தொலைக்காட்சி, Mu Guang Ming குடும்பத்தினர்களின் வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடைநிலைப் பள்ளியின் 2வது வகுப்பில் படிக்கும் அவரது மகள் Mu Jin Hua மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். அவர் கூறியதாவது:
"நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க மிகவும் விரும்புகின்றேன். ஏனெனில், இந்நிகழ்ச்சிகளிலிருந்து பாட நூல்களிலிருந்து கற்றுக்கொள்ள முடியாத பலவற்றைப் படிக்க முடியும். அன்றி, வெளிப்புற உலகையும் பார்க்க முடியும்" என்றார்.
1 2 3
|