
கடந்த ஆகஸ்ட் 8ம் நாளில், 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு இரண்டே ஆண்டுகள் இருந்த நிலையில், பெய்சிங் நகரின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள "சீன தேசிய இன பூங்காவில்" சிறுபான்மை தேசிய இனங்கள் வெவ்வேறான விளையாட்டுக்களை நடத்தி, அந்நாளின் வருகையை வரவேற்றன.
அதிகாலையிலேயே, பெய்சிங் நகரவாசிகள் தூக்கத்தில் மூழ்கியிருந்த போதே, தேசிய இன ஆடைகளை அணிந்த 160க்கும் அதிகமான சிறுபான்மை தேசிய இன விளையாட்டு வீரர்கள், சீன தேசிய இன பூங்காவின் வடக்கு வாசலில் உள்ள சதுக்கத்தில் திரண்டு, தத்தமது தேசிய இனங்களுக்கே உரிய உடல் பயிற்சி செய்தனர். இவ்வீரர்கள் சீரான செயல்பாடுகளுடன் இடைக்கிடையே அணி வடிவத்தை மாற்றினர். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வரவேற்பதற்காக, சீன தேசிய இன பூங்காவில் சிறுபான்மை தேசிய இனத்தவர்கள், தாமாகவே உடல் நல பயிற்சி நடவடிக்கையை நடத்தினர். இந்த உடல் பயிற்சி, அவர்களாகவே வடிவமைத்தது. சீனாவின் திபெத், மங்கோலியா, நசி முதலிய எட்டு சிறுபான்மை தேசிய இனங்களின் ஆடல் அசைவுகளும் இவற்றில் அடங்கும். இவை பார்ப்பதற்கு மிகவும் அருமை. அன்றி, கற்றுக்கொள்வதும் சுலபம்.
சீன தேசிய இன பூங்காவை, சிறுபான்மை தேசிய இனங்களின் ஒரு பெரும் குடும்பம் என கூறலாம். இங்கு, வருவோர், சிறுபான்மை தேசிய இனப் பகுதிகளின் இயற்கை காட்சிகளையும் கிராம கட்டிடங்களையும் காண முடியும். இது மட்டுமின்றி, அவர்களின் பழக்க வழக்கங்களையும் கண்டுகளிக்கலாம்.
1 2 3
|