
"பூங்காவில், திபெத் இனப் பகுதி முதலில் கண்களில் தென்பட்டது. இதில் திடகாத்திரமான இரண்டு திபெத் இன இளைஞர்கள், திபெத் இனத்தின் Ya Jia என்னும் போட்டியில் ஈடுபட்டனர். Ya Jia என்பது, சீனாவின் திபெத் இனப் பிரதேசத்தில் மிகவும் பரவலான விளையாட்டு ஆகும். திபெத் இனத்தவர்கள் இதை மிகவும் விரும்புகின்றனர். வழக்கமாக இருவர் இதில் ஈடுபடுகின்றனர். இரு தரப்பினரும் தாமே கயிற்றை தத்தமது கழுத்தில் போட்டு, முதுகுக்கு முதுகு என்ற முறையில், வயிற்றின் கீழ்பகுதி மூலம் கடந்த பின்னர், இருவரும் தரையைத் தொடும் வண்ணம் படுத்து, துவக்கம் என்ற உத்தரவு கேட்டதும், அவர்கள் முழு சக்தியுடன் மாறான திசையை நோக்கி ஊர்ந்து செல்லத் துவங்குகின்றனர். கயிற்றின் நடுவில் கட்டப்பட்ட சிவப்பு துணியை தம் பக்கத்துக்கு, எல்லையைத் தாண்டு இழுத்துச் சென்றால், வெற்றி கிடைக்கும். விரைவில் Cai Rang Jian Cuo என்னும் இளைஞர் வெற்றி பெற்றார். இத்தகைய போட்டியில் வெற்றி பெற்றவருக்கு புகழ் கிடைக்கும். இது மட்டுமின்றி, உள்ளூர் வாசிகளின் கண்களில் கணிசமான முக்கியத்துவம் பெறுவார்." அவர் கூறியதாவது:
"இது, இளைஞர்கள் போட்டியிடும் நடவடிக்கை. வெற்றி பெற்றவர் வீரர் என பாராட்டப்படுவார். அதே வேளையில், பெண்களின் காதலையும் வெல்ல முடியும்" என்றார்.
திபெத் இன பூங்காவிலிருந்து வெளியே வந்தால், தூரத்தில் ஒலிக்கும் முழக்கங்கள் ஈர்க்கின்றன. சத்தம் எழும்பும் இடத்தை நோக்கிப்பார்த்தோம். Dai இன மங்கையர்கள் மற்றும் இளைஞர்கள் பலர், மூன்று பிரிவுகளாகப் பிரிந்து, மரத்துண்டு காலணி என்னும் ஒரு வகை பந்தயப்போட்டியில் ஈடுபடுகின்றனர். இரண்டு மரத்துண்டுகளால் இக்காலணி உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு மரத்துண்டில் நான்கு கால் உறைகள் உள்ளன. நால்வர் தத்தமது கால்களை இவ்வுறைகளில் வைத்து, ஒருவருக்கு ஒருவர் இசைவாகச் செயல்பட்டு, ஒரே நேரத்தில் காலடி எடுத்து வைத்து முன்மோக்கி செல்கின்றனர். இம்மூன்று பிரிவுகளும் நீ முந்தி நான் முந்தி பின்தங்க எதுவும் விரும்பவில்லை. இவ்வளவு விறுவிறுப்பான காட்சி கண்டு, அங்குள்ள பயணிகள் கரவொலி எழுப்பி செய்து மகிழ்ந்தனர்.
இவ்விளையாட்டு நீண்டகால வரலாறுடையது. வெகு காலத்துக்கு முன்பே, சுவாங் இனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, இதர சிறுபான்மை தேசிய இனங்களும் இதை விளையாடுகின்றன.
1 2 3
|