
Miao இன பகுதியின் மத்திய சதுக்கத்தில், 72 உருக்கு வாள்களால் உருவாக்கப்பட்ட ஒரு இரும்புத் தூண் நிற்கின்றது. "வாள் மலை" என, இத்தூண் அழைக்கப்படுகின்றது. வெறும் கால்களால் இந்த வாள் மலையில் ஏறும் விளையாட்டு, Miao இன மக்களின் அநேக பாரம்பரிய விளையாட்டுக்களில் அதிர்ச்சியூட்டும் ஒன்றாகும்.
மேளச் சத்தத்துடன், சுமார் 30 வயதான Miao இன ஆண் வெறும் கால்களில் "இந்த வாள் மலையில் ஏறத் துவங்கினார். இவர் பரபரப்பின்றி ஒவ்வோர் அடியாக ஏறிக்கொண்டே, அவ்வப்போது ஒற்றைக் காலால் நின்று காட்டினார். அங்குள்ள பயணிகள் அதைக் கண்டு அஞ்சினர். விரைவில் இந்த ஆண், தட்டுத் தடங்கலின்றி வாள் மலையின் உச்சியில் ஏறினார்."
தென் மேற்கு சீனாவின் Gui Zhou மாநிலத்திலிருந்து வந்த அவருக்கு Zhong Kui என்ற பெயர். பத்து வயதுக்கு மேல் இந்த நுட்பத்தைக் கற்று பயிற்சி செய்து தேர்ச்சி பெற்றார். பத்து ஆண்டுகளுக்கு மேல் உருண்டோடின. இவ்வளவு கடினமான நுட்பம், இன்று அவரைப் பொறுத்த வரை, நடப்பது போல் சுலபமானது.
Miao இனத்தின் வாள் மலை விளையாட்டைப் பார்க்கையில், சீன தேசிய இன பூங்காவில் இதர விளையாட்டுக்களும் நடைபெற்றன. Jing Po இனத்தின் மூங்கில் தடி மேல் தாண்டுதல், மங்கோலிய இனத்தின் மற்போர் முதலியவை இவற்றில் அடங்கும். பெரும்பாலான விளையாட்டுக்களில் சிறுபான்மை தேசிய இனத்தவர்கள் தாமே கலந்து கொள்வது தவிர, பங்கெடுக்குமாறு பயணிகளுக்கும் அழைப்பு விடுத்தனர்.

2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறுவதற்கு சுமார் இரண்டு ஆண்டுகள் உண்டு. சீன தேசிய இன பூங்காவிலுள்ள சிறுபான்மை தேசிய இனத்தவர்கள் துடியாய் துடிக்கின்றனர். தத்தமது விளையாட்டுக்கள் மூலம் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மீதான எதிர்பார்ப்பை வெளிப்படுத்த அவர்கள் ஆவலாய் இருக்கின்றனர்.
2008ம் ஆண்டு பெய்சிங்கில் நடைபெறுவது, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தானே. வாய்ப்பு இருந்தால், Wa இன மக்களாகிய நாங்கள் இதில் கலந்து கொள்ள ஆசைப்படுகின்றோம் என்று Wa இன இளைஞர் ஒருவர் கூறினார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வருகையை நாங்கள் மிகவும் எதிர்ப்பார்க்கின்றோம். Bai இனத்தின் தனித்தன்மை வாய்ந்த விளையாட்டுக்களை செய்துக்காட்டுவதன் மூலம் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வரவேற்க விரும்புவதாக Bai இனத்தின் இளம் பெண் ஒருவர் தெரிவித்தார்.
பெய்சிங், உங்களை வரவேற்பதாக, மங்கோலிய இனத்தின் இளைஞர்கள் கூறினார்கள். 1 2 3
|