
கடந்த ஜுலை திங்கள் முதல் நாள், சிங்காய்-திபெத் ரயில் பாதை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. உலகில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான ரயில் பாதை இதுவாகும். இதனால், திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் ரயில் பாதை இல்லாத வரலாறு முடிவுக்கு வந்தது. உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த ரயில் பாதை, திபெத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களுக்கு இன்பத்தையும் நல்ல உடல் நலனையும் தருவது மட்டுமல்ல, அவர்களுக்கும் வெளியுலகிற்கும் இடையில் தொடர்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. தவிர, இதர நாடுகள் மற்றும் வட்டாரங்களின் மக்கள் திபெத்துக்கு வந்து, வர்த்தகம் செய்து, திபெத்தின் எழில் மிக்க காட்சிகளைக் கண்டு ரசிப்பதற்கு வசதியாக உள்ளது என்று அன்னிய நண்பர்கள் சிலர் கூறினர்.
லாசா நகரில், Bakuo என்னும் புகழ் பெற்ற வீதியில், Syamukapu என்னும் வெள்ளிப் பொருட்கடை இருக்கின்றது. இது, நீண்டகாலமாக இருந்து வரும் நேபாள கடை. இந்த கடையில் மிகவும் விறுவிறுப்பாக வியாபாரம் நடப்பதாக உள்ளூர் மக்கள் கூறினர். கடந்த ஜூன் திங்களின் இறுதியில், எமது செய்தியாளர் இந்த கடைக்குச் சென்ற போது, பரபரப்பாகக் காணப்பட்டது. சில தொழிலாளர்கள் இந்த கடையை நன்கு அலங்கரித்துக் கொண்டிருந்தனர்.

இந்த கடையின் உரிமையாளரான 45 வயது நேபாள வணிகர் Ratna Kumartuladhr செய்தியாளரிடம் கூறியதாவது:
"இந்த ரயில் பாதை போக்குவரத்துக்கு தொடங்கிய பின், என் கடையில் வியாபாரம் மேலும் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஏனெனில், மேலும் கூடுதலான மக்கள் திபெத்துக்கு வருவர். தற்போது, அதற்கு ஆயத்தம் செய்ய வேண்டும்" என்றார், அவர்.
கடந்த 22 ஆண்டுகளாக லாசா நகரில் Kumartuladhr வியாபாரம் செய்து வருகின்றார். தற்போது, பெரும்பாலான நேரம் லாசாவில் அவர் தங்கி, இந்த வெள்ளிப் பொருட்கடையை நிர்வகிக்கின்றார். சில மாதங்களுக்கு ஒரு முறை நேபாளத்துக்கு அவர் சென்று, சில வெள்ளிப் பாண்டங்களைக் கொண்டு வருகின்றார். ஆனால், சில பத்து ஆண்டுகளுக்கு முன், Kumartuladhrவின் மூதாதையர்கள், ஒட்டகத்தின் மூலம், லாசாவுக்கும் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுக்குமிடையே சென்றனர். வசதிக் குறைவான ஒட்டகப் போக்குவரத்தை அவர்கள் சகித்து கொள்ள வேண்டியிருந்தது. Kumartuladhrவின் தந்தை லாசாவில் 40 ஆண்டுகளாக வாழ்ந்து வியாபாரம் செய்தார். இந்தியாவில் தயாராகும் சோப்பு, துணி முதலிய பொருட்களை கொண்டு வந்து, திபெத்தின் கம்பளநூல், சீனாவின் உள்புற பிரதேசத்தில் தயாராகும் பீங்கான் பாண்டம் ஆகியப் பொருட்களைப் பரிமாறிக் கொண்டார்.
1 2 3
|