• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-20 10:53:34    
அந்நியர்களின் பார்வையில் சிங்காய்-திபெத் ரயில் பாதை

cri

அப்போது, திபெத்தில் மின்சார வசதியும் நல்ல நெடுஞ்சாலையும் இல்லை. Kumartuladhrவின் தந்தை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை நேபாளத்துக்கு திரும்ப வேண்டியிருந்தது. தற்போது, சிங்காய்-திபெத் ரயில் பாதை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டதுடன், Kumartuladhr பொருட்களை கொள்முதல் செய்வதற்கு வசதியாக உள்ளது. அவர் கூறியதாவது:

"இந்த ரயில் பாதை போக்குவரத்துக்கு திறந்து விடப்படுவது, சீனாவின் திபெத்துக்கும் நேபாளத்துக்கும் நல்லது. இந்த ரயில் பாதையை எதிர்பார்க்கின்றோம். ஏனெனில், அப்போது, அதிகப்படியான சீன வணிகப் பொருட்கள், இந்த ரயில் பாதை மூலம், சிங்காய் மாநிலத்திலிருந்து லாசாவுக்கு ஏற்றிச்செல்லப்படலாம். இதற்கான செலவு, தற்போதைய செலவை விட குறைவு. அப்போது, பொருட்களை சிங்காய் மாநிலத்திலிருந்து, நேபாளத்துக்கு கொண்டு செல்லலாம். நேபாளத்திலிருந்து பொருட்களை சீனாவுக்கு கொண்டு வரலாம்" என்றார் அவர்.

தற்போது, நேபாளாத்தில் தயாராகும் வெள்ளிப் பாண்டங்கள், புத்தர் சிலைகள், தாங்கா ஆகிய பொருட்களை அவர் முக்கியமாக விற்பனை செய்கின்றார். ரயில் பாதை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்ட பின், சீனாவின் உள்புற பிரதேசங்களிலிருந்து தரமிக்க, விலை மலிவான சிறிய ரக வீட்டு பயன்பாட்டு மின்சாரப் பொருட்களை கொள்முதல் செய்து, நேபாளத்தில் விற்பனை செய்ய அவர் ஆயத்தமாகிறார். நேபாளத்தின் கைவினை பொருள் உள்ளிட்ட தனிச்சிறப்பு மிக்க பொருட்களை விற்பதற்காக சீனாவின் உள்புற மாநிலத்தில் முகவர்களை நியமிக்க அவர் திட்டமிடுகின்றார். அவர் கூறியதாவது:

"சீனாவின் இதர நகர்களில் வியாபாரம் நடத்துவதில் ஆர்வும் கொள்கின்றோம். எடுத்துக்காட்டாக, பெய்சிங் மற்றும் சந்து. சீனாவின் இதர இடங்களில் கடையைத் திறப்பது மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த ரயில் பாதை மூலம், அதிகப்படியான சரக்குகளை, நேபாளத்திலிருந்து, லாசா வழியாக, சீனாவின் இதர நகர்களுக்கு கொண்டு செல்ல முடியும் என்று நம்புகின்றோம்" என்றார், அவர்.

1  2  3