• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-20 10:53:34    
அந்நியர்களின் பார்வையில் சிங்காய்-திபெத் ரயில் பாதை

cri

தற்போது லாசாவில் நேபாள வணிகர்கள் அதிகமாக இல்லை. சேவைத் தொழிலில் அவர்கள் முக்கியமாக ஈடுபடுகின்றனர். ரயில் பாதை திறந்து விடப்பட்டதாலும், லாசாவுக்கும், Zhang Mu நுழைவாயிலுக்கும் இடையிலான நெடுஞ்சாலை மேம்படுவதாலும், மேலும் அதிகமான நேபாள வணிகர்கள் திபெத்துக்கு வரக் கூடும் என்று Kumartuladhr எதிர்பார்க்கின்றார். நேபாள நாட்டின் செய்தித்தாள்களில், சிங்காய்-திபெத் ரயில் பாதை பற்றிய கட்டுரைகள் அதிகம். "உலகின் உச்சி" எனப்படும் சிங்ஹாய்-திபெத் பீடபூமியின் வழியாகச் செல்லும் இந்த ரயில் பாதை மீது நேபாள வணிக துறை பெரும் எதிர்பார்ப்பு கொண்டுள்ளது என்று அவர் செய்தியாளரிடம் கூறினார்.

Bakuo என்னும் வீதியில் இந்த வெள்ளிப் பாண்டக் கடைக்கு அருகில், Makye Ame என்னும் திபெத் இன உணவு விடுதி இருக்கின்றது. Scotland நாட்டிலிருந்து வந்த Vivian MacDonald அம்மையார், இந்த ரயில் பாதை பற்றி தனது கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"திபெத் மக்களைப் பொறுத்த வரை, இந்த ரயில் பாதை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்ட பின், மேலும் போதுமான சரக்குகள் திபெத்தில் நுழையும். அவர்களின் வாழ்க்கை மேலும் சிறக்கும். தவிர, மேலும் கூடுதலான பயணிகள் திபெத்துக்கு வருவார்கள் என்று நினைக்கின்றேன். ஏனெனில், ரயில் மூலம் சுற்றுலா பயணச் செலவு மேலும் குறைவாக உள்ளது" என்றார் அவர்.

மலிவான செலவைத் தவிர, சிங்காய்-திபெத் பீடபூமியின் எழில் மிக்க இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்க விரும்பும் பயணிகளுக்கு, ரயில் வண்டியில் பயணம் செய்வது, நல்ல தெரிவாகும். உலகிலேயே, வழி நெடுகிலும் அழகான இயற்கைக் காட்சிகள் மிகுந்த ரயில் பாதை என இது அழைக்கப்படுகின்றது. அடுத்த முறை ரயில் மூலம் திபெத்துக்கு செல்ல வேண்டும் என Vivian MacDonaldவின் மகள் Catnona விருப்பம் தெரிவித்தார்.

அவர்களுக்கு அருகில் இருந்த இஸ்ரேலி இளைஞர் Hagay Onn, இந்த ரயில் பாதை பற்றி கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"ரயில் பாதை திறந்து விடப்பட்டதுடன், மேலும் கூடுதலான பயணிகள் மேலும் எளிய முறையில் திபெத்துக்கு வருவர். உலகை எதிர்நோக்கும் கூடுதலான வாய்ப்புகள் திபெத்துக்கு உண்டு. மேலும் கூடுதலான மேலை நாட்டவர் திபெத்துக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வர்" என்றார் அவர்.

திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் வாழும் 20 லட்சம் மக்களும், உலகில் இதர இடங்களின் மக்களும், உலகிலேயே கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இந்த ரயில் பாதை மீது ஆழ்ந்த எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர்.


1  2  3