• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-27 19:33:13    
பனி மூடிய பீடபூமியில் பணி புரியும் தொண்டர் லி சியன் ஹுய்

cri

சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசம், அழகான பீடபூமி காட்சிக்கும் தனித்தன்மை வாய்ந்த திபெத் இன பழக்க வழங்கங்களுக்கும் புகழ்பெற்றது. ஆனால், காற்று குறைவாக இருப்பதால், பீடபூமியில் அமைந்துள்ள திபெத்தில் சமவெளியில் வாழும் மக்கள் குறுகிய காலம் மட்டுமே அங்கு பயணம் மேற்கொள்ளலாம். அவர்கள் நீண்டகாலத்திற்கு அங்கு தங்கி பணி புரிந்து வாழ்க்கை நடத்த முடியாது. இருப்பினும், 2003ஆம் ஆண்டின் கோடைகாலம் முதல், சமவெளியில் வளர்ந்த பல்கலைக்கழக படிப்பை முடித்த மாணவர்கள் பலர் அடுத்தடுத்து திபெத்க்குச் சென்றனர். அங்கு சேவை செய்து முடித்த பின், அங்கேயே நீண்டகாலம் தங்கியிருந்து பணி புரிய, பலர் விண்ணப்பம் செய்துள்ளனர். இன்றைய நிகழ்ச்சியில், லி சியன் ஹுய் என்ற அத்தகைய ஒரு தொண்டர் பற்றி உங்களுக்காக அறிமுகப்படுத்துகின்றோம்.

சிங்ஹாய் திபெத் பீடபூமியில் அமைந்துள்ள திபெத் தன்னாட்சி பிரதேசம், இப்போது நீங்கள் கேட்டு கொண்டிருக்கும் பாடலைப் போல் விசாலமானது. அங்குள்ள நீல வானமும் வெண் மேகமும் மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளன. ஆனால் கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டருக்கும் அதிகமான உயரத்திலுள்ள இந்த இடத்தில் காற்று மிகவும் குறைவு. அங்கு செல்லும் ஒரே ரயில் பாதையான சிங்ஹாய்-திபெத் ரயில் பாதை அண்மையில் போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டது. நீண்டகாலமாக மோசமான வானிலை அப்பகுதியின் வளர்ச்சியைப் பாதித்து வருகிறது.

கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகளில் இதர மாநிலங்கள் திபெத்துக்கு உதவி அளிக்க வேண்டும் என்ற கொள்கையை சீன அரசு பின்பற்றத் தொடங்கிய பிறகு, கடந்த சில ஆண்டுகளில் திபெத்தில் பெரிய அளவில் சமூக-பொருளாதார வளர்ச்சி காணப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன், சீனாவின் மேற்கு பகுதிகளுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தொண்டர்களாக சென்று சேவை புரியும் திட்டத்தை சீன கம்யூனிஸ்ட் இளைஞர் லீகும் கல்வி அமைச்சகமும் நடைமுறைப்படுத்தின. இத்திடத்தின் கீழ், ஓரிரண்டு ஆண்டுகளில் தொண்டர் சேவை புரிய பல்கலைக்கழக படிப்பை முடித்த மாணவர்கள் திரட்டப்பட்டனர். தொண்டர் சேவையை முடித்த பின் அங்கேயே தங்கி பணியாற்றவும் அவர்களுக்கு ஊக்கம் தரப்பட்டது. இந்த திட்டத்தை வரவேற்கும் பெரும்பாலான மாணவர்களில் லி சியன் ஹுய்யும் ஒருவர்.

1  2  3