• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-27 19:33:13    
பனி மூடிய பீடபூமியில் பணி புரியும் தொண்டர் லி சியன் ஹுய்

cri

லாசா நகரின் அரசு வழக்கறிஞர் மன்றத்தைச் சேர்ந்த பணியாளர்களைத் தவிர, சுற்றுப்புறத்திலுள்ள மாவட்டங்களின் அரசு வழக்கறிஞர் மன்றங்களின் பணியாளர்களும் பயிற்சி பெற்றுள்ளனர். இந்த பணியாளர்களுடன் பழகிய போது, அவர்களுக்கு சட்ட அறிவு குறைவு என்பதை லி சியன் ஹுய் கண்டறிந்தார். அவர்கள் மேலும் அதிகமாகத் தெரிந்து கொள்வதற்காக, தமக்கு ஏற்பட்ட காற்று குறைவு நோயையும் அவர் பொருட்படுத்தாமல், அடிக்கடி அதிக நேர வேலை செய்து பாடம் கற்பித்தார்.

ஆசிரியராக பணி புரிவது, லி சியன் ஹுய் லாசாவில் பொறுப்பேற்றுள்ள பணிகளில் ஒரு பகுதிதான். உள்ளூர் அரசு வழக்கறிஞர் மன்றத்தின் மிக முக்கியமான அரசு வழக்குரை பிரிவில் அவர் பணிக்கு அமர்த்தப்பட்டார். வழக்குகளை சுதந்திரமாக சமாளிக்கும் தகுதியுடன் கூடிய உதவி அரசு வழக்கறிஞராகவும் அவர் நியமிக்கப்பட்டார். மற்றவர்களுக்கு மிகவும் சிக்கலாக தெரிந்த வழக்குகளை அவர் விரும்பி ஏற்றுக் கொண்டார். அவரின் திபெத் இன சக பணியாளர் சிரென்தோஜி செய்தியாளரிடம் கூறியதாவது—

"அவரை போன்ற தொழில் முறை திறமைசாலிகள் இங்கு மிக குறைவு. எடுத்துக்காட்டாக பொருளாதார வழக்குகளைச் சமாளிக்க கூடிய பணியாளர்கள் எங்கள் மன்றத்தில் குறைவு. அவர்தான் இத்தகைய வழக்குகளை தாமாகவே விரும்பி ஏற்று நன்றாக சமாளிக்க முடியும்" என்றார் அவர்.

தமது சட்ட அறிவு மற்றும் உணர்வுபூர்வமான மனநிலையுடன், சமார் ஓராண்டில் அவர் பத்துக்கும் அதிகமான வழக்குகளை சுதந்திரமாக சமாளித்தார். தவறு எதையும் செய்யவில்லை. லாசா நகரின் அரசு வழக்கறிஞர் மன்றத்தின் துணை தலைமை அரசு வழக்கறிஞர் லியூ ஜியா யுன் பாராட்டிக் கூறியதாவது—

"வழக்குகளைச் சமாளிக்கும் போது, சட்ட தத்துவத்தைப் பயன்படுத்தும் திறமையை அவர் வெளிப்படுத்தினார். வழக்குகளின் தன்மையை உறுதிப்படுத்தி தண்டனை விதிக்கும் துறையில் அவர் ஆராய்ச்சி ஆழமாகவும் உருப்படியாகவும் உள்ளது" என்றார் அவர்.

இப்போது, லாசா நகரின் அரசு வழக்கறிஞர் மன்றத்தில் முதலாவது முதுகலை பட்டம் பெற்ற இளம் அரசு வழக்கறிஞராக லி சியன் ஹுய் திகழ்கிறார்.

திபெத்தில் ஓராண்டு பணி புரிந்த பின் பெய்ஜிங்கிற்குத் திரும்ப அவர் முன்பு திட்டமிட்டிருந்தார். ஆனால் ஓராண்டுக்கு பின் தாம் திபெத்தை விட முடியாது என்பதை புரிந்து கொண்டார். தற்போது, நீண்டகாலத்திற்கு திபெத்தில் தங்கி பணி புரிவதென அவர் முடிவு செய்துள்ளார். அவரின் தகுதியும், தொண்டர் என்ற முறையிலிருந்து அதிகாரப்பூர்வமான அரசு வழக்கறிஞராக மாறியுள்ளது.


1  2  3