
28 வயதான லி சியன் ஹுய், சீனாவின் கிழக்கு பகுதியின் கடலோரத்தில் பிறந்து வளர்ந்தவர். எமது செய்தியாளர் அவரைச் சந்தித்த போது, அவரின் முகம் சிங்ஹாய் திபெத் பீடபூமியின் கடுமையான வெய்யிலினால் ஏற்படும் புற ஊதா கதிர் வீச்சினால் கறுப்பாக மாறியுள்ளது. அவரின் கண்களில் விவேகம் மின்னியது.
கடந்த ஆண்டில் Peking பல்கலைக்கழகத்தில் சட்டவியல் முதுகலை பட்டப் படிப்பு படித்த போது, ஒரு சட்ட நிறுவனத்தில் பகுதி நேர வேலை செய்தார். பல்கலைக்கழக மாணவர்கள் தொண்டர்களாக சீனாவின் மேற்கு பகுதிகளுக்குச் சென்று சேவை புரியும் திட்டத்தை அறிந்து கொண்ட போது, அவர் இரண்டு தெரிவுகளை எதிர்நோக்கினார். ஒன்று, திங்கள் ஒன்றுக்கு பத்தாயிரம் யுவான் ஊதியத்துடன் உழைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு, அந்த சட்ட நிறுவனத்தில் வேலை செய்வது. இரண்டு, சுமார் ஆயிரம் யுவான் அடிப்படை வாழ்க்கை செலவுடன் தொண்டராக சேவை புரிவது. தீவிரமான யோசனைக்குப் பின் அவர் இரண்டாவது பாதையைத் தெரிந்தெடுத்து திபெத்துக்குச் சென்றார்.
"திபெத், எனக்கு சிறப்பான உணர்வை தருகிறது. அந்த மர்ம பூமியில் மத நம்பிக்கை நிறைந்து காணப்படுகிறது. சீனாவின் மேற்கு பகுதிகளுக்கு சேவை புரியும் திட்டத்தில் சேர்ந்த போது, திபெத் நான் தெரிவு செய்த இடமாகும்" என்றார் அவர்.
திபெத் சென்றடைந்த பின், அடி மட்டத்தில் வேலை செய்ய விரும்பிய லி சியன் ஹுய், லாசா நகரின் அரசு வழக்கறிஞர் மன்றத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டார். புகழ்பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து வந்த அவர், ஆசிரியராக பணிபுரிந்து, பணியாளர்களுக்கு சட்டம் பற்றிய பயிற்சி அளித்தார்.
1 2 3
|