• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-29 11:17:17    
மியோ இன கிராமத்தில் தைவான் பல்கலைக்கழக மாணவர்கள்

cri

தென் மேற்கு சீனாவின் குயோ சோ மாநிலத்தில் லோங் தே என்னும் ஒரு மியோ இனக் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுவதிலும் ஒரே பசுமை. வீடுகள் மலைகளை ஒட்டி கட்டப்பட்டுள்ளன. தெளிந்த ஆற்று நீர் கிராமத்தைச் சுற்றி ஓடுகின்றது. இது, அமைதியான ஒரு கிராமம். இருப்பினும் அண்மையில் சீன தைவானிலிருந்து வந்த பல்கலைக்கழக மாணவர்கள் பலர் தங்களது சிரிப்பொலியை இங்கு கொண்டு வந்தனர்.

அதிகாலையில் மெல்லிய மூடுபனி கிராமத்தின் மேலே கவிகிறது. கிராமத்தில், அழகான ஆடை அணியும் பெண்மணிகள், உள்நுழை தடைக்கான மது தயாரித்து, தைவான் விருந்தினர்களை வரவேற்கின்றனர். உள்நுழைவு தடை பாடல் பாடுவதும், மது வழங்குவதும், மியோ இனத்தின் வரவேற்புக்கான உச்ச மரியாதையாகும். கிராமத்திற்கு வெளியே, தைவான் பல்கலைக்கழக மாணவர்கள் உணர்ச்சி தூர, கிராமத்தை நொக்கி பார்க்கின்றனர். வூ கோ யு என்பவர் அவர்களில் ஒருவர். அவர், தைவானிலுள்ள சிறுபான்மை தேசிய இனத்தவர். தை பெய் நகரத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்பட்ட படிப்பு மாணவராக கல்வி பயில்கின்றார். கருப்பு தோல் நிறம், உயர்ந்த உடல் ஆகியவற்றால், ஆள்கூட்டத்தில் சிறப்பு கவனம் ஈர்க்கும் சக்தியுடையவர். மூன்றாவது முறை பெருநிலப்பகுதி வந்திருப்பதாகவும், பெருநிலப்பகுதியின் சிறுபான்மை தேசிய இனத்தவர்களுடன் இவ்வளவு நெருங்கி பழகுவது முதல் தடவை என்றும் அவர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார். முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கண்ட, பெருநிலப்பகுதியின் சிறுபான்மை தேசிய இனம் பற்றிய தகவல்களை இன்று நேரில் கண்டதாக அவர் சொன்னார்.

கிராமத்தில் நுழையத் துவங்கி, வூ கோ யுவும் அவரது நண்பர்களும் நீண்ட வரிசையில் நின்று, மியோ இன மங்கையர்கள் கவனமாகத் தயாரித்த மதுவை குடித்துக்கொண்டே மலையின் நடுப்பகுதியிலுள்ள லோங் தே மியோ கிராமத்தில் ஏறி முடித்தனர்.

1  2  3