
வேறுபட்ட உயர் நிலை கல்வி நிலையங்களிலிருந்து வந்த இம்மாணவர்கள் வெவ்வேறான சிறப்பு துறைகளைச் சேர்ந்தவர்கள். அனைத்து சீன தைவான் உடன்பிறப்புகள் நட்பு சங்கம் ஏற்பாடு செய்துள்ள "2006ம் ஆண்டு தைவான் பல்கலைக்கழக மாணவர்களின் கோடைக்கால முகாம்" என்ற நடவடிக்கையில் கலந்து கொள்ளும் நோக்குடன், பெருநிலப்பகுதிக்கு அவர்கள் வருகை தந்துள்ளனர். குயோ சோ, அவற்றில் உள்ள ஒரு கிளையாகும். குயோ சோ கிளை அணியில் மூன்றில் ஒரு பகுதி மாணவர்கள், தைவானின் சிறுபான்மை தேசிய இனத்தவர்களாவர். அவர்களில் பெரும்பாலானோர், முதன்முறையாக பெருநிலப்பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.
உள்நுழைவு தடைக்கான 12 முறை மது குடித்த பின்னரும், வூ கோ யு, இன்னமும் வீறிடும் எழுச்சி ததும்ப காணப்படுகின்றார். செய்தியாளரிடம் பேசுகையில் தைவானிலுள்ள சிறுபான்மை தேசிய இனத்தவரிடையே மது குடிக்கும் பழக்கம் உண்டு என்றும், ஆகையால், 12 முறை மது குடித்தாலும் பயனில்லை என்றும் கூறினார்.
லோங் தே மியோ கிராமத்தில் நுழைந்ததும், தைவான் விருந்தினர்கள், கிராமத்தின் மையத்தில் உள்ள செம்பு முரசு வைக்கப்பட்டுள்ள சதுக்கத்தைச் சுற்றி அமர்ந்தனர். இச்சதுக்கம், கற்களால் கட்டப்பட்டது. தொலைவிலிருந்து பார்த்தால், ஒரு மாபெரும் செம்பு முரசு போலிருக்கின்றது. சதுக்கத்தின் நடுவில் உயர்ந்த மரத் தூண் இருக்கின்றது. இதில் செம்பு முரசு தொங்க விடப்பட்டுள்ளது.
கலை நிகழ்ச்சி துவங்குவதற்கு முன், தைவான் மாணவர்கள் உணர்ச்சிவசப்பட்டு படம்பிடிக்க துடியாய் துடிக்கின்றனர். தைவான் பல்கலைகக்ழக மாணவி ஒருத்தி லே லேங் ஸிங் செய்தியாளரிடம் பேசுகையில், மியோ இனத்தின் ஆடைகளும் அலங்காரங்களும் மிகவும் அழகு எனக் கூறினார்.
1 2 3
|