• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-29 11:17:17    
மியோ இன கிராமத்தில் தைவான் பல்கலைக்கழக மாணவர்கள்

cri

"மியோ இனத்தின் ஆடைகளும் அலங்காரங்களும் மிகுதியும் அழகு. அவர்களின் தேசிய இன தனித்தன்மையை அவை காட்டுகின்றன. ஒரு பார்வையிலேயே மியோ இனம் என தெரிந்து விடுகிறது. குறிப்பாக, தொப்பி மிகவும் நல்லது" என்று அவர் சொன்னார்.

சற்றுப் பின்னரே, அரங்கேற்றம் துவங்கியது. மியோ இன இளைஞர்கள் பலர் நாணலால் ஆன ஒரு வகை இசைக்கருவியை கைகளில் ஏந்தி இசைத்தபடியே ஆடத் துவங்கினர். மியோ இன இளம் பெண்கள் பக்கத்தில் ஆடுகின்றனர். மியோ இனத்தவர்களின் தலைசிறந்த அரங்கேற்றம், வூ கோ யு மற்றும் அவரது நண்பர்களின் ஆரவாரமான கரகோஷத்தை ஈர்த்தது. எனவே, அவர்களும் சதுக்கத்தின் நடுவில் நுழைந்து மியோ இன உடன்பிறப்புகளுக்கு தமது தேசிய இன ஆடல்பாடல்களை அரங்கேற்றினர்.

அனைவரும் கையோடு கைகோர்த்து வட்டமாக ஆடியபடியே பாடுகின்றனர். வட்டம் சிறியதாகவும் பெரியதாகவும் அவ்வப்போது மாறுகிறது. அவர்களின் அரங்கேற்றத்தைப் பாராட்டிய மியோ இன இளைஞர்கள் கரவோலி எழுப்பி ஆர்ப்பரித்தனர்.

இந்நிகழ்ச்சிகளை குயோ சோ மாநிலத்தின் தைவான் நட்புறவு சங்கத்தின் தலைமை செயலர் தோ பிங் யுங் அம்மையார் கண்டுகளித்தார். மியோ இனத்தவர்களும் தைவான் சிறுபான்மை தேசிய இனத்தவர்களும் அரங்கேற்றிய கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்த பின் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், இது போன்ற, இரு கரைப் பண்பாட்டு தொடர்புக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இரு கரை மக்களின் நட்புறவை மேலும் மேம்படுத்த முடியும் என்றும் கூறினார்.

"எனது கருத்தில், சீனப் பண்பாடு, வாழையடி வாழையாக வளர்கின்றது. இரு கரை மக்களின் மனதில் என்றுமே ஆழப் பதிந்துள்ளது" என்று சோ பிங் யுங் அம்மையார் கூறினார்.

லோங் தே கிராமத்தில் ஒரு நாள் பயணம் முடிவடைகின்றது. செய்தியாளரிடம் பேசுகையில், இந்நாளில் பலவற்றைக் கற்றுக்கொண்டதாக வூ கோ யு தெரிவித்தார்.

"இன்றைய நடவடிக்கை, இரு கரை சிறுபான்மை தேசிய இனங்களுக்கிடையே பண்பாட்டுத் தொடர்புக்கு ஒரு துவக்கமே. கூடுதலான மாணவர்கள் இங்கு வருவார்கள் என நம்புகின்றேன். இனிமேல் இருகரை பண்பாட்டுத் தொடர்பு மேலும் அதிகமாக நிகழ வேண்டும்" என்றார், அவர்.


1  2  3