• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-11 15:37:02    
ஒரு சிறு கிராமத்துடன் தொடர்பு கொண்டுள்ள ஐ.நாவின் மூத்த மொழிபெயர்ப்பாளர்கள்

cri

அண்மையில், மத்திய சீனாவின் He Nan மாநிலத்தில் உள்ள "Da Cheng" எனும் கிராமத்தில், பசிபிக் கடலின் மற்றொரு பக்கத்திலிருந்து வந்த முதியோர் இருவர் பற்றி கிராமவாசிகள் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டனர். இந்த முதியோர்கள், ஐ.நாவின் மூத்த மொழிபெயர்ப்பாளர்கள். அவர்கள், சீனாவின் தைவானில் பிறந்த Hua Jun Xiong மற்றும் சீனாவின் ஹாங்காங்கில் பிறந்த Liu Da Zheng. ஐ.நாவில் வேலை செய்யும் இந்த இரண்டு முதியோர்களுக்கு, சீனாவில் உள்ள ஒரு சாதாரண கிராமத்துடன் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது?

கடந்த ஜுன் திங்களின் ஒரு நாளில், "Da Cheng" கிராமத்தில், விழாச் சூழ்நிலை காணப்பட்டது. சாலையின் இரு பக்கங்களிலும், திரண்ட கிராமவாசிகள் இந்த முதியோர் இருவருக்கு வணக்கம் தெரிவித்தனர். இந்த முதியோர்கள், நியூயார்க்கிலிருந்து "Da Cheng" கிராமத்திற்கு சிறப்பாக வந்தனர்.

இந்த முதியோர்கள் "Da Cheng" கிராமத்துடன் தொடர்பு கொள்வதற்கு, அவர்களின் சக பணியாளர் Cao Guo Zhong காரணமாகும். 37 வயதான Cao Guo Zhong, "Da Cheng" கிராமத்தில் வளர்ந்து வந்தார். கடந்த எட்டு ஆண்டுகளாக, அவர் ஐ.நாவில் வேலை செய்கிறார். Hua Jun Xiong மற்றும் Liu Da Zhengகின் பாராட்டை அவர் பெற்றுள்ளார். இந்த இரண்டு முதியோர் Cao Guo Zhongஉடன் ஆழந்த நட்புறவை உருவாக்கியுள்ளனர்.

வெளிநாட்டில் வேலை செய்த போதிலும், தனது ஊரில் வாழும் மக்களை Cao Guo Zhong மறக்கவில்லை. "Da Cheng" கிராமத்தின் வளர்ச்சிக்காக, அவர் அடிக்கடி பணம் அனுப்பிக் கொண்டே இருந்தார். வறுமை நிலைமையில் வளர்ந்த இந்த இரண்டு முதியோர்கள் இதைக் கேட்ட பின், இந்த இளைஞரின் செயலினால் மனமுருகினர். Cao Guo Zhongக்கு உதவிட இயன்றதனைத்தையும் செய்ய அவர்கள் தீர்மானித்தனர். Hua Jun Xiong கூறியதாவது:

"நானும், Liu Da Zhengஉம் ஏழைக் குடும்பத்தில் வளர்ந்தோம். வளர்ச்சி குறைந்த கிராமங்களுக்கு பங்காற்றுவதில் நாங்கள் கவனம் செலுத்துகின்றோம். எனது விருப்பத்தை Cao Guo Zhong புரிந்து கொண்ட பின், Da Cheng கிராமம் பற்றி விவரித்தார். இது, நல்ல வாய்ப்பு என்று கருதுகின்றோம்" என்றார், அவர்.

He Nan மாநிலத்து Jiao Zuo நகரின் புறநகரில் உள்ள "Da Cheng" கிராமத்தில், ஒரு ஏழைக் கிராமமாக திகழ்கின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இதற்கு அருகில் உள்ள கிராமங்கள் வளர்ந்து வருகின்றன. ஆனால், இந்தக் கிராமம் இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. கிராமத்தில் ஓரளவு நல்ல சாலைகள் இல்லை. துவக்க நிலைப் பள்ளிகளில் கல்வி வசதிகள் பின்தங்கியவை.

1  2  3