• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-11 15:37:02    
ஒரு சிறு கிராமத்துடன் தொடர்பு கொண்டுள்ள ஐ.நாவின் மூத்த மொழிபெயர்ப்பாளர்கள்

cri

அதற்கு பின், "Da Cheng" கிராமத்தைப் பார்வையிட இந்த இரண்டு முதியோர்கள் தீர்மானித்தனர். Liu Da Zheng கூறியதாவது:

"பொது மக்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களின் கருத்தைக் கேட்டு, அவர்களின் இன்னல்களைப் புரிந்து கொள்வதற்கு ஒரு நேரடி வாய்ப்பைப் பெற நான் விரும்பினேன். சீனக் கிராமப்புறம் பற்றி மேலும் புரிந்து கொள்ள நாங்கள் விரும்புகின்றோம்" என்றார், அவர்.

அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்களுக்காக நிலத்தை ஒதுக்கி, வீடுகளை கட்டுவதென தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலத்தைப் பயன்படுத்தி, நூலகத்தை அல்லது முதியோருக்கான உடல் பயிற்சி மையத்தை நிறுவலாம் என்று முதியோர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்காவில் அவர்கள் சொகுசான வாழ்க்கை நடத்திய போதிலும், கிராமத்தில் பின்தங்கிய நிலைமையை பெரிதாக கருதவில்லை. இங்கு வாழ்வது தங்களது வீட்டில் இருப்பது போல் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

"Da Cheng" கிராமத்தின் எதிர்காலம் பற்றி, அவர்கள் முழு எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர். Liu Da Zheng கூறியதாவது:

"Da Cheng கிராமத்துக்கு எங்கள் உதவி சிறிய பங்கு மட்டுமே. இது துவக்கம் மட்டுமே. எதிர்காலத்தில் கிராமத்தின் விவகாரங்களில் பங்கெடுத்து, கவனம் செலுத்தி, கிராமத்தின் வளர்ச்சிக்காக பணத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு பின், "Da Cheng" கிராமம், புதிய தோற்றத்துடன், He Nan மாநிலத்தின் கிராமங்களில் ஒரு முன்மாதிரியாக மாறக்கூடும்" என்றார்.


1  2  3