• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-11 15:37:02    
ஒரு சிறு கிராமத்துடன் தொடர்பு கொண்டுள்ள ஐ.நாவின் மூத்த மொழிபெயர்ப்பாளர்கள்

cri

"Da Cheng" கிராமத்தின் நிலைமை பற்றிக் கேள்விப்பட்டதும், சாலையை செப்பனிட்டு, வகுப்பறைகளைச் சீரமைப்பதற்கு, ஒவ்வொருவரும் 10 ஆயிரம் அமெரிக்க டாலரை வழங்குவதென இருவரும் தீர்மானித்தனர். கடந்த மார்ச் திங்களின் இறுதியில், மொத்தம் 20 ஆயிரம் அமெரிக்க டாலரை அமெரிக்காவிலிருந்து "Da Cheng" கிராமத்திற்கு அவர்கள் அனுப்பினர். அதில் ஒரு பகுதி நிதியைப் பயன்படுத்தி, கணிணிகளை கிராமம் வாங்கியது. கிராமத்தில் உள்ள துவக்க நிலைப் பள்ளியில் கணிணி அறை நிறுவப்பட்டது. கிராமத்தில் உள்ள சாலையைச் செப்பனிடுவதற்கு மற்றொரு பகுதி நிதி பயன்பட்டது.

இவ்விரண்டு முதியோர்களின் அன்பால் கிராமவாசிகள் மனமுருகினர். கிராமவாசி Zuo Can Zhang கூறியதாவது:

"எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஏனெனில், முன்பு இத்தகைய விஷயம் இல்லை. எங்கள் கிராமம் மிகவும் வறுமையானது. இந்த இரண்டு முதியோர்கள், எங்களுக்காக நிதியைத் திரட்டி, எங்கள் கிராமத்தின் வளர்ச்சியை ஆதரிப்பது கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைக்கின்றேன்" என்றார் அவர்.

இரண்டு முதியோர்கள், கிராமத்துக்கு நிதி உதவி அளிப்பது மட்டுமல்ல, நாகரிகமும் பரவியுள்ளனர் என்று பேசிய "Da Cheng" கிராமத்தின் பொறுப்பாளர் Li Guang Le, முன்பு கிராமத்தின் பொது நலன் விவகாரங்களில் பங்கெடுக்க மக்கள் விரும்பவில்லை. "Da Cheng" கிராமத்தில் இந்த இரண்டு முதியோர்கள் அக்கறை செலுத்திய பின், கிராமவாசிகளின் செயல்பாடு மாறி விட்டது என்று கூறினார். தற்போது, தங்களது அண்றாட வேலையை முடித்த பின், தொண்டர் பணிகளில் அவர்கள் விரும்பிப் பங்கெடுக்கின்றனர். கிராமச் சாலையைச் செப்பனிடும் போது, கிராமவாசிகள் அனைவரும் உதவி செய்தனர் என்று அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"அவர்கள் எங்கள் கிராமத்துக்கு வந்து, நிதி உள்ளிட்ட பல பிரச்சினைகளைத் தீர்த்தனர். இது தவிர, அவர்கள் காட்டிய எழுச்சி மேலும் முக்கியமானது. சீன தேசத்தின் தலைசிறந்த ஒழுக்க நெறி இதுவாகும்" என்றார், அவர்.

இக்கிராமத்தில் முதியோர் இருவரின் செல்வாக்கை புரிந்து கொண்ட பின், கிராமத்தின் கெளரவத் தலைவர்களாக இந்த முதியோரை பரிந்துரை செய்யும் எண்ணம் Li Guang Leவுக்கு ஏற்பட்டுள்ளது. அவர், கிராமவாசிகளின் பிரதிநிதிகளைத் திரட்டி கூட்டம் நடத்தினார். அவரின் எண்ணத்தை அனைவரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். அதன் பிறகு, இவ்விரு முதியோர்கள், கிராமத்தின் கெளரவத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

1  2  3