• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-13 18:13:17    
பு யி இனத்தின் முதலாவது கிராமம்

cri

பு யி இனம், சீனாவின் 55 சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றாகும். அதன் 26 லட்சம் மக்கள் தொகையில் 50 விழுக்காட்டுக்கு அதிகமானோர் தென் மேற்கு சீனாவின் கு சோ மாநிலத்தில் வசிக்கின்றனர். இன்றைய நிகழ்ச்சியில், பு யி இனத்தவர்கள் கூடிவாழும் கிராமமான "நிலா கிராமத்துக்கு செல்வோம். இங்கு தேசிய இனப் பண்பாடு பத்திரமாக பராமரிக்கப்படுவதினால், இது "சீனாவில் பு யி இனத்தின் முதலாவது கிராமம்" என அழைக்கப்படுகின்றது.

"பு யி இனத்தின் அனைத்து கிராமங்களும், மலை அடிவாரங்களில் ஆற்றங்கரையில் உருவாகியுள்ளன. சுற்று வட்டாரங்களில் அடர்ந்த நாடுகள் வளர்ந்துள்ளன. ஆறுகள் வளைந்து ஓடுகின்றன. தெள்ளத்தெளிவான நீர் பாயும் ஒரு சிறு ஆறு செய்தியாளர்களை" நிலா கிராமத்துக்கு வழிகாட்டியது. கிராமத்தை அடைவதற்கு முன், இளம்பெண்களின் இனிய பாட்டொலி கேட்டது. அழகான பு யி இன இளம் பெண்கள், பல வண்ண தேசிய ஆடைகளை அணிந்து, இரு கைகளிலும் மதுக் கோப்பைகளை ஏந்தி, செய்தியாளர்களுக்கு மது வழங்கினர். "இது, பாதை கடவுக்கான தடை மது" என, உள்ளூர்வாசி லீ சிங் செய்தியாளருக்குத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"மதிப்புமிக்க விருந்தினர்கள் வரும் போது, அவர்களுக்கு மதிப்பு அளிக்க நல்வாழ்த்துக்காக, மது வழங்குவார்கள். இளைஞர்களுக்கு ஒரு முறை. முதியவர்களுக்கு இரு முறை" என்றார்.

1  2  3