
பு யி இனத்தின் பழக்க வழக்கங்களின் படி, விருந்தினர்கள் எவரும், இரு கோப்பை மது குடித்த மின்னரே, பு யி இனத்தின் கிராமத்துக்குள் நுழையலாம். மது குடிக்கும் பழக்கமில்லாதவர்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், அரிசியால் தயாரிக்கப்பட்ட இம்மது, இனிப்பாக இருக்கும் மக்களை போதையில் ஆழ்த்தாது என்று லீ சிங் தெரிவித்தார்.
நிலா கிராமதத்தில் ஒவ்வொரு வீட்டைச்சுற்றிலும் மூங்கில் வேலி போடப்பட்டுள்ளது. கிராம ஓரத்தில் ஓடும் "நிலா ஆறு" கிராமத்துக்கு அழகை ஏற்படுத்துகின்றது. இந்த நிலா ஆறு காரணமாகவே, "நிலா கிராமம்" என பெயர் பெற்றுள்ளது.
இந்த நிலா கிராமத்தில், பு யி இனத்தின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் பல நிலைத்திருக்கின்றன. அவற்றில், செம்பு முரசு தனித்தன்மை வாய்ந்தது. பு யி இனத்தின் நாட்டுப்புறப்பாடல் விழாவான "ஜுன் 6" என்ற பாரம்பரிய விழா நாளில் செய்தியாளர்கள் அங்கு இருந்தனர். விழாக் கொண்டாட்டங்களில் புனித பொருள் என பு யி இனம் கருதும் செம்பு முரசைப் பார்த்தனர்.
செம்பு முரசு என்றால், பு யி இனம் வழிபாடு செய்வதற்கான முக்கிய கருவியாகும். கிட்டத்தட்ட ஒவ்வொரு பு யி கிராமத்திலும் குறைந்தது, ஒரு செம்பு முரசு இருக்கின்றது. வழக்கமாக, கிராமத்தில் உள்ள பெரியவர், அல்லது பிரமுகர் இதை பத்திரமாக பராமரிக்கின்றார். 70 வயதான முதியோர் சென் சு ஹங் இக்கிராமத்தில் செம்பு முரசு வல்லுநர். செம்பு, முரசு பற்றி அவர் கூறியதாவது:
"செம்பு முரசு, எங்கள் பு யி இனத்தின் பொக்கிஷம். மதிப்புடையது. முழு தேசிய இனத்தின் ஒற்றுமையின் அடையாளமாக இது திகழ்கின்றது" என்றார்.
1 2 3
|