
செம்பு முரசு எப்படித் தோன்றியது என்பது பற்றி மக்களிடையில் ஒரு கதை நிலவுகிறது. அதாவது, இந்த செம்பு முரசு சொர்க்கக் கடவுள் பு யி இனத்துக்கு வழங்கிய பொக்கிஷம் என்று இக்கதை கூறுகின்றது. முதியோர்கள் காலமாகும் போது, மக்கள் முரசடித்து, சொர்க்கக் கடவுளை அழைப்பார்கள். அவர் அந்த முதியோரை சொர்க்கத்திற்கு கொண்டு போவார். அதன் பிறகு இறந்த முதியோர் கடவுளாக இருப்பார். புத்தாண்டுப் பிறப்பிலும், விடுமுறைகளிலும் விழாக்களிலும், மூதாதையர்களும் வழிபாடு செய்யும் போதும் முரசு அடிக்கப்படும். அப்போது மூதாதையர்கள் சொர்க்கத்தில் இருந்து இறங்கி வந்து பிள்ளைகளுடன் சேர்ந்து விழாவை கொண்டாடி மகிழ்வார்கள். பு யி இனத்தவர்களிடையே செம்பு முரசு பெற்றுள்ள புனிதம் காரணமாக, செம்பு முரசை அறைவதற்குக் கண்டிப்பான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. புத்தாண்டு, ஈமச்சடங்கு அல்லது இதர மாபெரும் விழா நாட்களில் பு யி இனத்தவர்கள், செம்பு முரசை அடிக்கும் போது பயபக்தியோடு, முதலில் முரசுக்கு வழிபாடு நடத்துவார்கள்.
செம்பு முரசு வழிபாடு கிராமத்தில் மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது. செம்பு முரசுக்கு முன்னால் பன்றி தலை, சேவல் முதலிய படையல் இடுவார்கள். கிராமத்திலுள்ள பெரியவர்களின் தலைமையில் திருமணம் முடித்த பணிபுரியும் ஆண்கள் இவ்வழிபாட்டில் பங்கெற்பார்கள் தலைமுறை தலைமுறையாக இருந்து வரும் வழிபாட்டு பாடலை பெரியார்கள் பாட, இடுப்பில் செம் பட்டு துணியைக் கட்டிய இளைஞர்கள் அவர்களோடு சேர்ந்து பாடி, கடவுள்களுக்கு வழிபாடு செய்வதற்கான கிண்ணத்திலிருந்து அரிசி மதுவை தெளிப்பார்கள். முரசுக்கு வழிபாடு செய்வது பற்றி முதியோர் சென் சு ஹங் சுருக்கமாக எடுத்துக்கூறினார். அவர் கூறியதாவது:

செம்பு முரசு, எங்கள் பு யி இனத்தின் புனித முரசாகும். அதற்கு மதிப்பு அளிக்கின்றோம். எனவே, ஆண்டுதோறும் முரசுக்கு வழிபாடு செய்யும் போது அனைவரும் கலந்து கொள்வார்கள். பன்றி, கோழி இறைச்சி எல்லாவற்றையும் சமைத்துக் கொண்டு வருவார்கள். முதலில், கிராமத்திலுள்ள முதியோர் மூன்று முறை முரசை அடிப்பார்கள். முதல் அடி, சொர்க்கக் கடவுளுக்கு, இரண்டாவது அடி, தரை கடவுளுக்கு;மூன்றாவது அடி, புனித முரசுக்கு; இம்மூன்று அடிகளுக்குப் பின், அடுத்த ஆண்டு அமோக அறுவடை கிடைக்க புனித முரசு அனைவருக்கும் உத்தரவாதம் செய்யும்.
சென் சு ஹங் குடும்பம் மட்டுமே "நிலா கிராமத்தில்" முரசு அடிப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. அவரது வீட்டில் பு யி செம்பு முரசு பற்றிய நூல் பராமரிக்கப்படுகின்றது. சென் சு ஹங் என்ற முதியோரின் மருமகன், முரசு அடிப்பதில் கெட்டிக்காரர். அவர் பெயர் சென் லு சியாங், இந்த பண்டைய முரசு நூல் எவ்வாறு இது வரை பராமரிக்கப்படுகிறது என்பது பற்றி கூறியதாவது:
முன்பு முதியோருக்கு எழுதவாசிக்கத் தெரியவில்லை. அவர்கள், மனப்பாடம் செய்தனர். புத்தாண்டு நாட்களில் ஒரு திங்கள் நேரத்தைச் செலவழித்து தமது இளம் தலைமுறையினருக்கு கற்பித்தனர். இவ்வாறு தலைமுறை தலைமுறையாக மனப்பாடம் செய்யப்பட்டுள்ளது. எங்கள் தலைமுறையினர் பள்ளிகளில் கல்வி கற்கும் வாய்ப்பு பெற்றுள்ளோம். பு யி இனத்துக்கு சொந்த எழுத்துக்களில்லை. இதனால், பு யி இன மொழி போன்ற ஒத்த உச்சரிப்பிலான ஹன் இன எழுத்துக்களில் முரசு நூல்களை எழுதிவைத்துள்ளோம். இந்த எழுத்துக்களைப் பார்த்த பின்னரே, என்ன பொருள் என்று புரிந்து கொள்வோம் என்றார். 1 2 3
|