
நண்பர்களே நீங்கள் அடிக்கடி கல்வி கேள்வியில் அதிக ஆர்வம் கொண்ட குழந்தைகளைச் சந்திக்கிறீர்கள். அன்றோ?அவர்கள் எப்போதும் சரமாரியாக கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். சீன பெற்றோர் அடிக்கடி இத்தகைய தொல்லைகளைச் சந்திக்கிறார்கள். சில சமயம் குழந்தைகளின் முடிவற்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத அளவுக்கு அவர்கள் சென்றுள்ளார்கள். எனினும் "சீனக் குழந்தைகள் கலைக்களஞ்சியம்"என்னும் நூல் பல பெற்றோரை இன்னலிருந்து விடுவித்துள்ளது. இந்த நூல் வெளியிடப்பட்டதும் பல குழந்தைகளின் வரவேற்பை பெற்றுள்ளது. காலப்போக்கில் அது குழந்தைகளின் சிறந்த ஆசிரியரும் நண்பருமாக வடிவெடுத்துள்ளது.
"வுவாங் யூ ஹேன்: கடந்த ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சீனா எத்தனையாவது இடம் வகித்தது?யாங் சியௌ மின்:இரண்டாவது"
நேயர்களே நீங்கள் சற்றுமுன் கேட்டது பெய்சிங் சௌ யாங் வட்டத்திலுள்ள ஒரு துவக்கப் பள்ளி மாணவர்களின் ஒரு வகுப்பறைக் காட்சியின் ஒலிப்பதிவு. "அறிவியலை ஆற்றலாகக் கொண்டு கழுகுக் குஞ்சுகள் இறக்கைகளை விரித்து பறக்கு"என்பது இக்கூட்டத்தின் தலைப்பாகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பற்றிய வினா விடைகள் தவிர, கேலி நாடம், நடனம், சீன தேயிலை பண்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெறுகின்றன.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் "சீன குழந்தை கலைக்களஞ்சியம்"என்னும் நூலிலிருந்து கற்றுக் கொண்ட அறிவைக் கொண்டு படைக்கப்பட்டவையாகும் என்று மாணவி சியூ தொங் எமது செய்தியாளரிடம் கூறினாள். அவள் கூறுகிறாள்.
1 2 3
|