• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-18 10:44:47    
சீனக் குழந்தைகள் கலைக்களஞ்சியம்

cri

"நாங்கள் இந்த கலை நிகழ்ச்சிகளை தயாரிக்கும் முன் கலைக்களஞ்சிய நூலிலிருந்து தொடர்புடைய அறிவை கற்றுத் தேர்ந்தோம். எடுத்துக்காட்டாக மனிதரின் தோலுக்கு ஒரு தடவை முகப்பூச்சு போட்டால் மேலும் அழகாக மாறும் என்று கூறுவதற்கில்லை என்பது பற்றிய அறிவு இதிலிருந்து தான் கிடைக்க முடிந்தது"..

இந்த மாணவி கூறிய கலைக்களஞ்சியம் என்பது"சீன குழந்தை கலைக்களஞ்சிய" நூல் மட்டுமே. இந்த நூல் படங்களை முக்கியமாகக் கொண்டு சீனப் பண்பாட்டின் தனிச்சிறப்பைப் பிரதிபலிக்கின்றது. இந்த நூல் 5 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. இது மாணவர்களின் வரவேற்பை மிகுதியும் பெற்றுள்ளது. இப்போது தான் இருக்கும் துவக்கப்பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறையிலும் இந்நூல் பொது இடங்களில் வைக்கப்படிருப்பதாக சியூ தொங் கூறினாள்.

இயற்கை உலகம் அறிவியல் தொழில் நுட்பம் சமூகம் ஆகிய மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. விண்வெளி வானவியல் உயிரின உலகம் போக்குவரத்து துறை மனித மருத்துவம் பண்பாடு மற்றும் விளையாட்டுக்கள் மனித வரலாறு முதலிய பல துறைகள் பற்றிய அறிவுகள் இதில் உள்ளடங்குகின்றன. எனினும் குழந்தைகளை மேலும் கவரக் கூடியது என்னவெனில் இந்நூலிலுள்ள எழில் மிக்க படங்களும் உயிர்த்துடிப்பான மொழிகளும் ஆகும். எடுத்துக் காட்டாக ஆற்றல் என்னும் இயற்பியல் கருத்தை பதிப்பாசிரியர்கள் விவரிக்கும் போது ஆற்றலின் பல்வகை வடிவங்களை வாழ்க்கை நிலைமைகளுடன் சாமர்த்தியமாக ஒன்றிணைத்துள்ளனர். மிதி வண்டிகள் வீதியில் திரும்பும் போது சறுக்கல், புரண்டோடும் போது ஏற்படும் பூமி ஈர்ப்பு ஆற்றல், சீசா என்னும் பலகை விளையாட்டில் காணப்படும் சரிசம ஆற்றல் ஆகியவை இதற்கு எடுத்துக் காட்டுக்களாகும். இப்படியிருக்க குழந்தைகள் சிக்கல் வாய்ந்த அறிவியல் கோட்பாடுகளை மிக விரைவில் புரிந்து கொள்ள முடியும். தவிரவும் மற்ற வாழ்க்கை நிலைமையையும் இவர்களால் விளக்கிக் கூற முடியும்.

1  2  3