• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-18 10:44:47    
சீனக் குழந்தைகள் கலைக்களஞ்சியம்

cri

சௌ சியு சிங் அம்மையார் இந்த நூலின் பதிப்பாசிரியர் மற்றும் பரிசீலனை பணிக்குப் பொறுப்பாளர் ஆவார். அவர் கூறியவாறு நேர்முக படங்கள் மீது குழந்தைகள் அதிக அக்கறை காட்டியதால் அவர்கள் இந்த நூலை தொகுத்து எழுதிய போது நேர்த்தியான படங்களை முக்கியமாக தெரிவு செய்தார்கள். அவர்கள் படங்களுடன் சேர்ந்து எளிய மொழியில் அறிவை விவரித்துள்ளார்கள்.

குழந்தைகளின் விருப்ப வெறுப்புகளை புரிந்து கொள்ளும் வகையில் பதிப்பாசிரியர்கள் ஒரே தலைப்பு கொண்ட படங்கள் பலவற்றை பள்ளிகளுக்கு கொண்டு சென்று மாணவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்கள்.

"அவர்கள் விரும்பும் படங்கள் கீழ் வருமாறு அமைய வேண்டும். அதாவது நடுவில் ஒரு பெரிய படம் இருக்க வேண்டும். அது குழந்தைகளின் பார்வையை கவர முடியும். பின் சுற்றுப் புறங்களில் சில சிறிய படங்கள் வைக்கப்பட வேண்டும் வேறு சில கேலிச்சித்திரப் படங்கள். பின்னர் அவர்கள் கூறிய படி நாங்கள் செய்தோம்"என்றார் அவர்.

குழந்தைகள் நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாது என்பதால் ஒழுங்கான அறிவை விவரிக்கும் போது நாங்கள் அவற்றை சிறு சிறு பகுதிகளாக பிரித்துள்ளோம். அவை குழந்தைகளின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்பும் கொண்டவை. எடுத்துக்காட்டாக மனிதரின் மூச்சு விடும் உறுப்பு பற்றி அறிமுகம் செய்யும் போது தும்மல் கொட்டாவி விடுவது, இருமல் ஆகிய பகுதிகளாக பிரித்து விவரித்துள்ளோம். இதன் மூலம் குழந்தைகள் முழுமையான மூச்சுவிடும் உறுப்பை புரிந்து கொள்ள முடிந்தது என்று சௌ சியு சிங் அம்மையார் கூறினார்.

"சீனக் குழந்தைகள் கலைக்களஞ்சியம்"என்னும் நூல் வெளியிடப்பட்ட பின் இது வரை 30 லட்சம் பிரதிகள் விர்பனையாகியுள்ளன. பல குழந்தைகள் இதனால் பயன் பெற்றுள்ளது. மேலும் மகிழ்ச்சி தரக் கூடிதாகும். மாணவி லியு யி சான் எமது செய்தியாளரிடம் கூறியதாவது.

"இந்த நூல் எனக்கு உதவியாக இருக்கிறது. ஒரு தடவை நான் என் பெற்றோரின் நண்பர்களுடன் சேர்ந்து சீன அரங்காட்சியகத்தை போய் பார்த்தேன். அங்கு பல பிங்கான்களையும் இன்ன பிறவற்றையும் கண்டு மகிழ்ந்தோம். அவர்களுக்குத் தெரியாதவற்றை நான் தாராளமாக விளக்கம் செய்தேன். அவர்கள் என்னை வாயார பாராட்டினார்கள். இதனால் நான் மிகவும் களிப்படைந்தேன். இப்போது இந்த நூலை படிக்க படிக்க மேலும் என் அக்கறை அதிகரித்துள்ளது என்றார்"அவள்.


1  2  3