• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-20 11:26:48    
தேசிய இனப் பண்பாட்டை வெளிக்கொணர்வது

cri

மங்கோலிய இனம்

சீனாவின் 96 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்புடைய நிலத்தில், ஹன், மங்கோலியா, திபெத், வெய் உள்ளிட்ட 56 தேசிய இனங்கள் வாழ்கின்றன. தேசிய இனங்களின் தனித்தன்மையையும் தேசிய இனப் பண்பாட்டையும் வெளிக்கொணரும் பொருட்டு, அண்மையில் பெய்சிங்கில், தேசிய இன மலர் என்னும் இயக்கம் நடைபெற்றது. 56 தேசிய இனங்கள் ஒவ்வொன்றிலும் இருந்து அறிவும் ஆற்றலும் மிக்க பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய இன மலர் என அழைக்கப்பட்டனர். இன்றைய நிகழ்ச்சியில், அவர்களைச் சந்தித்து நெருங்கி பழகுவோம்.

நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, "சொர்க்கலோகம்" என்னும் ஒரு மங்கோலிய இனப்பாடலாகும். இசைக்கு ஏற்ப அழகாக ஆடும் இந்த மங்கோலிய இன இளம் பெண்ணின் பெயர். ஜிஜிக். புல்வெளியில் வாழும் மங்கோலிய இனத்தவர்கள் பெரும்பாலும் சீனாவின் உள்மங்கோலியப் பிரதேசத்தில் வசிக்கின்றனர். கடந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளில், அவர்கள், பரம்பரை பரம்பரையாக நாடோடி வாழ்க்கை நடத்தியுள்ளனர். மங்கோலிய இனம் என்றாலே, வெள்ளை நிறக் கூடாரங்கள் நமது நினைவில் நிழலாடுகின்றன. அவை, வெண் மேகம் போல், கண்கொள்ளாத காட்சியாக புல்வெளியை அலங்கரிக்கின்றன. அன்றி விரும்தோம்பல் மிக்க மங்கோலிய இன மக்கள் இக்கூடாரங்களில் வசிக்கின்றனர். எங்கள் முன்னால் நின்ற இம்மங்கோலிய இன பெண்மணி, தமது இனம் பற்றி பேசிய போது, அவருடைய முகத்தில் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் காணப்படுகின்றன. அவர் கூறியதாவது:

"எங்கள் தேசிய இனம், நீண்ட வரலாறும், பண்பாட்டுச்சிறப்பும் உடைய இனம். எங்கள் மங்கோலிய இனத்தவர்களின் உடம்பில் Chinggis Khan என்பவரின் ரத்தம் பாய்கின்றது. எங்கள் மங்கோலிய இன மக்கள் அனைவரும், உற்சாகமிக்கவர்கள். விரும்தோம்பல் நிறைந்தவர்கள். துணிவும் வலிமையும் உடையவர்கள். குறிப்பாக, மனம் திறந்து பேசுகிறவர்கள்" என்றார்.

மங்கோலிய இனத்தைப் பிரதிநிதியாக ஒரு தேசிய இன மலர் என்ற சிறப்பை எட்டியது குறித்து, அவர் மிகவும் பெருமைப்படுகிறார். இப்போது பலர் தங்களது தேசிய இன பண்பாட்டினை அலட்சியம் செய்துள்ளனர். நாளுக்கு நாள் மங்கோலிய கூடாரங்கள் குறைந்து வருகின்றன. நகரங்களில் குடியேறுவோர் அதிகமாகி விட்டனர் என்று அவர் சொன்னார். மங்கோலிய இனத்தையும் பெரும் புல்வெளியையும் அதிக அளவில் மக்கள் புரிந்து கொள்ளும் படி செய்வதே, எனது கடமை. அப்படியானால் தான் உண்மையான தேசிய இன மலராக நான் திகழ முடியும் என்று ஜிஜிக் கூறினார்.

1  2  3