
ஹநி இனம்
19 வயதான லீ ஜிங், தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்திலிருந்து வந்துள்ள ஒரு ஹநி இன இளம் பெண். செய்தியாளரிடம் பேசுகையில், தமது ஊரில், தேசிய இனப் பண்பாட்டின் செல்வாக்கு முன்பை விட குறைவு என்று அவர் சொன்னார். இவ்வியக்கத்தில் கலந்து கொண்டதற்கு என்ன காரணம் என்று கேட்பதற்கு அவர் சொன்னார்.
"தேசிய இன மலரைத் தேர்ந்தெடுப்பது, ஒரு அழகிப்போட்டி அல்ல. இவ்வியக்கம் மூலம் ஒரு தேசிய இனத்தின் தனித்தன்மை மிக்க பண்பாட்டை வெளிப்படுத்த முடியும். எங்கள் இனத்தின் மீது பொது மக்களின் கவனம் அதிகரிக்கும். இது, எங்கள் தேசிய இனத்தின் வளர்ச்சியைத் தூண்டும்" என்றார், அவர்.
பொருளாதார வளர்ச்சியின் காரணமாக, மேலும் அதிகமான மக்கள், கிராமத்தை விட்டு நகரங்களுக்குச் செல்கின்றனர். வாழ்க்கை வளமடைந்துள்ள அதே வேளையில், ஹநி இனத்தின் பாரம்பரிய செல்வாக்கும் குறைந்து வருகின்றது என்று லீ ஜிங் கருதினார். ஒரு தேசிய இனத்தைப் பொறுத்த வரை, ஒருவரின் ஆற்றல் மட்டுமே போதாது. தன்னால் இயன்ற அளவில் பண்பாட்டுச்சிறப்பை பிரச்சாரம் செய்து, மேலும் அதிகமான மக்கள் ஹநி இனத்தைப் புரிந்து கொள்ளும்படி செய்வது தான், தமது கடமை என்றார், அவர்.
1 2 3
|