
தேசிய இன மலர் போட்டி சீனாவில் முதன்முறையாக நடைபெற்றது. இதில் கலந்து கொள்வோரைப் பொறுத்த வரை, அவர்களின் கல்வியறிவையும், தத்தமது இனங்கள் பற்றிய அறிவு-பற்று அளவையும் சோதிப்பது, முக்கியமானது. ஏனெனில், ஒவ்வொரு தேசிய இன மலரும் தனது சொந்த இனத்தையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். ஒவ்வொருவரும், சொந்த இனப் பண்பாட்டை பிரதிபலிக்கின்றனர். இந்த இயக்கத்தை நடத்தும் Zhang Huai Zhong பேசுகையில், சிறுபான்மை தேசிய இனங்களின் இயல்பான பண்பாட்டில் கவனம் செலுத்தி, பாதுகாக்குமாறு ஊக்குவிப்பதே, இந்த இயக்கத்தை நடத்துவதன் நோக்கம் என்றார். அவர் கூறியதாவது:
"நவீன பொருளாதாரத்தின் வளர்ச்சியினால், இப்போது பல சிறுபான்மை தேசிய இனங்களின் பண்பாடு அழியும் விளிம்பில் உள்ளது என்று கூறலாம். பல சிறுபான்மை தேசிய இனங்கள் படிப்படியாக நவீனமாகி வருகின்றன. பொருளாதாரம் என்ற கோணத்தில் பார்க்கும் போது, இது ஒரு முன்னேற்றம் தான். ஆனால், பண்பாட்டு அளவிலே பார்த்தால் இது ஒரு பேரழிவு" என்றார்.

பல சிறுபான்மை தேசிய இனத்து பிரதேசங்கள் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. புவியமைப்பு ஒரு காரணம் என்பதோடு, சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்களில் உள்ள திறமைசாலிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. தேசிய இன மலர் போட்டி, சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டில் கவனம் செலுத்துமாறு பொது மக்களைத் தூண்டுகிறது. அதே வேளையில், இத்திறமைசாலிகள் வெளியுலகத்துக்கு வருவதற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது என்று அவர் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"எங்கள் சீன நாட்டுக்கு ஒளிவீசும் பண்பாடு உண்டு. இது, தேசிய இனத்தின் சொத்து அல்ல. மனிதகுலத்துக்கு சொத்தாகும். இப்போது, இப்பண்பாட்டை யாரும் காப்பாற்றவில்லை என்றால், சில தலைமுறைகளுக்குப் பின் அல்லது சில பத்து ஆண்டுகளுக்கு பின், அருங்காட்சியகத்தில் மட்டும் இதை பார்க்க முடியும்" என்றார், அவர்.
சிறுபான்மை தேசிய இனங்களுடன் பல்லாண்டுகளாக நெருங்கி பழகியுள்ள Zhu Zhi Zhongஉம், இக்கருத்தை ஒப்புக்கொண்டார். தேசிய இனப்பண்பாட்டின் செம்மை, அதன் தனித்தன்மையை நிலைநிறுத்துவதாகும். தேசிய இன மலர் போட்டியில் கலந்து கொண்ட சிறுபான்மை தேசிய இன மங்கையர்களின் கலை நிகழ்ச்சிகளின் மூலம் முழுக்க முழுக்க சிறுபான்மை தேசிய இன நடையுடை பாவனையைத் தாம் கண்டுள்ளதாக அவர் சொன்னார். 1 2 3
|