• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-27 09:27:07    
துங் இனக் கிராமத்தில் விருந்தினர்

cri

Gu Lou என்பது, துங் இன கிராமத்தின் தனித்தன்மை வாய்ந்த அடையாளக் கட்டிடங்களில் ஒன்றாகும். அதன் வெளித்தோற்றம், ஒரு கோபுரம் போலிருக்கின்றது. இது 20 மீட்டருக்கு மேல் உயரமானது. அதன் சுற்றுப்புறங்களில் மர நாற்காலிகள் உள்ளன. அமர்ந்து ஓய்வு பெறலாம். முழு கட்டிடமும், மரப்பலகைகளால் உருவாக்கப்பட்டது. துங் இனத்தின் இளைஞர் லு லிங் சென் பேசுகையில், துங் இன கிராமம் ஒவ்வொன்றிலும் இத்தகைய கட்டிடம் உள்ளது என்றார். அவர் கூறியதாவது:

"எங்கள் துங் இனத்துக்கு மிக முக்கியமானது, Gu Lou என்பதாகும். கிட்டத்தட்ட எங்கள் அனைவருக்கும் லு என்பது குடும்பப் பெயர். முன்னோடிகள் இங்கு வந்த போது அவர்கள் அனைவரும் லு என்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். பின்னர் 5 குடும்பக் குழுக்களாக பிரிந்தனர். ஒரு குடும்பக்குழுவை ஒரு Gu Lou பிரதிநிதித்துவப்படுகின்றது. எங்கள் குடும்பக்குழு, இந்த Gu Louஐ சுற்றி வசிக்கின்றது" என்றார்.

இந்த கட்டிடத்தை நெருங்க நெருங்க, பத்துக்கும் அதிகமான இளைஞர்களும், இளம் பெண்களும் சீராக வரிசையாக நின்று, பிரபலமான துங் இனப் பாடலைப் பெரும் பாடிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய பாடலுக்கு இயக்குநரோ பக்க வாத்திய இசையோ இல்லை, அவர்கள் அனைவரும் இணைந்து வேறுபட்ட குரலில் பாடுகின்றனர்.

"Yue Liang" என்னும் பெயரிட்ட துங் இன பெண் செய்தியாளரிடம் பேசுகையில், துங் இன பெரும் பாடல் பாடப்படும் சூழ்நிலை மிகவும் கண்டிப்பானது. பொதுவாக, முக்கிய விழா நாட்களிலும் தொலைவிலிருந்து வரும் மதிப்புள்ள விருந்தினர்களை வரவேற்கும் போதும் Gu Louஇல் பாட முடியும் என்றார்.

இப்பாட்டு கேட்டுக்கொண்டிருக்கையில், இரவாகி விட்டது. பல குரல்கள் பாடும் இப்பாட்டொலி, மெல்லிய குரலில் இருவர் பாடும் பாடலாகியது. மகிழ்ச்சியூட்டும் சிரிப்புடன் பாடலைக்கேட்டுக்கொண்டே, கேட்பவர்கள் மனமுருகுகின்றனர்.

1  2  3