
Gu Louஇன் சுற்றுப்புறங்களில், துங் இன கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகள் உண்டு. எண்ணற்ற வெள்ளி அலங்காரப்பொருட்களும் சித்திரத்தையல் பொருட்களும் இருக்கின்றன. காதணி, கழுத்து அணி, தைவளை முதலிய வெள்ளிப் பொருட்களும், பூக்கள், வண்ணத்துப்பூச்சிகள் அடங்கும் சித்திரத் தையல் ஆடைகளும் இருக்கின்றன.
அவற்றுக்குள் ஒரு சிறிய கடையில் நுழைந்து எமது செய்தியாளர் இக்கடையில் உரிமையாளருடன் பேசத்துவங்கினார். Lu Shu Huai என்பது அவரது பெயர். 50க்கு மேலான வயது. செள ச்சிங்கில் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து விட்டதால் அவரது குடும்பம், துங் இன கைவினைப்பொருட்கள் விற்கும் கடையை நடத்தத் துவங்கியது. வியாபாரம் மேம்பட்டு வருவதுடன் குடும்பத்தின் வாழ்க்கையும் முன்பை விட வளமடைந்துள்ளது. இப்போது, அவரது குடும்பம் புதிய வீடுகளை கட்டி, வீட்டுப்பயன்பாட்டுக்கான அதிகமான மின் கருவிகளையும் வாங்கியது.

ஏராளமாக நூல்களைப் படித்துள்ள அவர், சொந்த தேசிய இனப் பண்பாட்டின் பாதுகாப்பு மற்றும் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றார். துங் இன கைவினைப்பொருட்களை விற்பதன் மூலம் வருமானம் ஈட்டுவதோடு, துங் இனப் பண்பாட்டை பிரச்சாரம் செய்வதற்கும் துணையாயிருப்பதாக அவர் சொன்னார். அவர் கூறியதாவது:
"துங் இன கைவினைப் பொருட்களை விற்பது, எங்கள் துங் இனப்பண்பாட்டை பிரச்சாரம் செய்வது மட்டுமல்ல, செள ச்சிங் கிராமத்தில் இத்தகைய தேசிய இனக் கைவினைப் பொருட்கள் இருப்பதை அறிந்து கொள்ள பயணிகளுக்கு துணை புரியும்" என்றார்.
அவரது குடும்பத்தினர்களிடமிருந்து பிரியா விடை பெற்று வெளியே போகும் போது, துங் இனத்தின் சுவையான உணவுகளை ருசி பார்க்கும் நேரமாகி விட்டது. சுவையான உணவுப்பொருட்களை உட்கொள்ளும் அதே வேளையில், துங் இனத்தின் அரிசி மதுவை குடித்துக்கொண்டே துங் இன மக்களுடன் சேர்ந்து ஆசைத்தீர ஆடிப்பாடி மகிழ்ந்தனர். ஆனந்த கடலில் மூழ்கியிருப்பது போன்ற உணர்வு எங்கள் மனதில் பதிந்துள்ளது. அங்கிருந்து விட்டுச் செல்ல விரும்பவில்லை. 1 2 3
|