 கடந்த காலத்தில் குடும்பச் சேமிப்புத் திட்டம் பற்றி சீனர்கள் மிகவும் அறிந்திருக்கவில்லை. ஆனால் தற்போது சீனாவின் பல்வேறு நகரங்களைக் கவனமாக பார்த்தால், சேமிப்புத் திட்டம் பற்றிய விளம்பரங்கள் பலவற்றை நீங்கள் காணலாம். சமூக வளர்ச்சி மற்றும் செல்வ அதிகரிப்புடன், தங்களிடம் அதிகரித்து வரும் பணத்தை எப்படி ஏற்பாடு செய்வது என்பது சீனர்களின் முக்கிய பிரச்சினையாகும்.
அண்மையில் அனைத்து சீன மகளிர் சம்மேளனமும் சீனாவின் வங்கி ஒன்றும் பெய்ஜிங்கில் சேமிப்புத் திட்ட அறிவு பற்றிய பயிற்சி வகுப்பை கூட்டாக நடத்தின. இந்த வகுப்பில் கலந்து கொண்ட பெரும்பாலோர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மகளிர் ஆவர்.
பெய்ஜிங்கில் அரசு நிறுவனம் ஒன்றில் பணி புரியும் சு யூ ஜிங் அம்மையார் இந்த வகுப்பில் கலந்து கொண்டார். முன்பு தமது மனம் போன போக்கில் பணத்தை செலவிட்டதாக செய்தியாளரிடம் அவர் கூறினார். திருமணத்துக்குப் பின், மாமியாருடன் சென்று அடிக்கடி பொருட்களை வாங்குகிறார். வீடு திரும்பிய பின் அனைத்து செலவுகளையும் மாமியார் சிறு புத்தகத்தில் எழுதி வைப்பதை அவர் கண்டார். பிறகு அவர் கணக்கு போடத் துவங்கினார். அப்போது அவசியமற்ற செலவுகளை அவர் அடிக்கடி கண்டறிய முடிந்தது. இதனால் அவரின் நுகர்வு முறை விவேகமாக மாறியது.
கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பித்ததாக சு யூ ஜிங் அம்மையார் கூறினார். அவர் கூறியதாவது—
"முன்பு அன்றாட வாழ்வில் ஏற்பட்ட அனுபவம் மூலம் சேமிப்புத் திட்டம் பற்றிய எளிதான தகவல்களை தெரிந்து கொண்டோம். சேமிப்புத் திட்ட நிபுணர்கள் சொல்லி கொடுக்கும் பாடங்களின் மூலம் மேலும் சிறப்பான தொழில் முறை அறிவைப் பெற விரும்புகின்றோம். எங்கள் வாழ்க்கைக்கு இது மேலும் பெரும் துணை புரியும்" என்றார் அவர்.
1 2 3
|