• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-25 16:06:09    
சீனாவில் பரவி வரும் குடும்பச் சேமிப்புத் திட்டம்

cri

சீனத் தேசிய சேமிப்புத் திட்ட வரைவாளர் கமிட்டியைச் சேர்ந்த லியூ யான் பின் கூறியதாவது—

"வாழ்க்கை தரம், சேமிப்புடன் தொடர்புடையது. அது ஒவ்வொருவருக்கும் முக்கயத்துவம் வாய்ந்தது" என்றார் அவர்.

குடும்பப் சேமிப்புத் திட்டம் சீனாவில் பரவி வளர்ந்த போதிலும், சிலர் சேமிக்கும் நிலை உயர்வாக இல்லை. தோல்வியில் முடிந்த எடுத்துக்காட்டுகள் குறைவாக இல்லை என்று சேமிப்புத் திட்ட துறை நிபுணரான லியூ யான் பின் கூறினார். சேமிப்புத் திட்டம் பற்றிய முறையான அறிவை பொது மக்கள் புரிந்து கொள்வதற்கு உதவிட, அவர் பணிபுரியும் கமிட்டி பல வகுப்புகளை ஏற்பாடு செய்து நடத்துகிறது.

தற்போது, சீனாவில் சில நிதி நிறுவனங்கள் சேமிப்புத் திட்டம் பற்றிய பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, வெவ்வேறு வருமானப் பிரிவினருக்கு ஏற்ற சேமிப்புத் திட்டங்களை வழங்கியுள்ளன. சீன கட்டிட வங்கி தனிநபர் நிதிப் பிரிவுத் துணைத் தலைவர் மா மேய் சின் அம்மையார் செய்தியாளரிடம் பேசுகையில், பாரம்பரிய பண சேமிப்பு அலுவலை கட்டிட வங்கி மேம்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு வசதிகளை தருவதோடு, நிதியம், நம்பிக்கை பொறுப்பு, தங்கம், அந்நிய செலாவணி உள்ளிட்ட சேமிப்புத் திட்டத்துக்கான சேவைகளையும் வழங்கியுள்ளது என்று கூறினார். பல்வகையான இந்த சேவைகள் வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன.

"தற்போது வங்கியின் சேமிப்புத் திட்டங்களில் வாடிக்கையாளர்கள் மும்முரமாக முதலீடு செய்கின்றனர். திறந்து வைக்கப்பட்ட கணக்குபடி, ஒவ்வொரு ஆண்டிலும் வங்கி வழங்கிய புதிய சேவை புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. வாங்குதல் அளவுபடி, மேலும் கூடுதலான முதலீடு சேமிப்புத் திட்டத்தில் போடப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு வாடிக்கையாளர்கள் மேலும் பெரும் முக்கியத்தும் தருகின்றனர்" என்றார் அவர்.

சேமிப்புத் திட்டம் தீட்டுவதற்காக, சேமிப்புத் திட்ட வரைவாளர் என்ற புதிய தொழில் ஏற்பட்டது. தற்போது, சீனாவில் சுமார் ஒரு கோடி குடும்பங்களின் ஆண்டு வருமானம் 5 லட்சத்தை எட்டியுள்ளது. ஒரு சேமிப்புத் திட்ட வரைவாளர் 100 குடும்பங்களுக்கு சேவை புரிய முடியும் என்று கணக்கிட்டால், இந்த குடும்பங்களுக்கு ஒரு லட்சம் திட்ட வரைவாளர்கள் என்பது குறவான எண்ணிக்கைதான்.


1  2  3