• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-25 16:06:09    
சீனாவில் பரவி வரும் குடும்பச் சேமிப்புத் திட்டம்

cri

சேமிப்புத் திட்டத்துக்கான சு யூ ஜிங் அம்மையாரின் தேவை, சீனர்களின் வருமான மாற்றத்தை வெளிப்படுத்துகிறது.

திரு லியூ யான் பின், சீன சேமிப்புத் திட்ட நிபுணர்கள் குழுவின் தலைமைச் செயலாளர். குழந்தைப் பருவத்தில் தமது தாய் தந்தையாரின் வருமானம் மிக குறைவு. அடிப்படை வாழ்க்கை செலவுகளுக்குப் பிறகு, பணச் சேமிப்பு இல்லை என்று அவர் நினைத்தார். ஆனால் தற்போதைய நிலை வித்தியாசமானது. அவர் மற்றும் அவரது மனைவின் வருமானத்தில் அன்றாட செலவு போக, ஓரளவு தொகை மிஞ்சுகிறது. இதனால், சேமிப்புத் திட்டத்தை தீட்ட வேண்டிய தேவை உள்ளது. அவர் கூறியதாவது—

"எங்கள் குழந்தை பருவத்தில் தாய் தந்தையார் ஒரு திங்களுக்கு பல பத்து யுவான் ஊதியம் மட்டுமே ஈட்டினர். அப்போது மிக கவனமாக பணத்தை செலவிட வேண்டியிருந்தது. இப்போது வருமானம் பெருமளவில் அதிகரிப்பதால், எப்படி முதலீடு செய்து, எதிர்கால வாழ்க்கையை மேலும் சீராக்குவது என்பதையும், வாழ்க்கைத் தரத்தை தொடர்ந்து உயர்த்துவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்" என்றார் அவர்.

சேமிப்புத் திட்டத்தின் தோற்றமும் வளர்ச்சியும், சீன சமூக வளர்ச்சியின் தேவையாகும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். முன்பு திட்டமிட்ட பொருளாதார அமைப்பு முறையில், சீனர்களின் மருத்துவ சிகிச்சை, ஓய்வூதியம் ஆகிய பிரச்சினைகளை அரசு தீர்த்தது. கடந்த நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகளில் இருந்து, சந்தை பொருளாதார வளர்ச்சியுடன், ஓய்வூதியம், மருத்துவ சிகிச்சை ஆகியவை படிப்படியாக சமூக மயமாக்கப்பட்டு விட்டன. அடிப்படை காப்பீட்டை மட்டுமே சீன அரசு வழங்கத் துவங்கியது. முதுமை காலத்தில் தரமிக்க வாழ்க்கையை நடத்த வேண்டுமானால், குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே ஏற்பாடு செய்ய வேண்டும். தவிர, சமூகத்தின் வளர்ச்சியினால், பொருள் மற்றும் பொழுது போக்கு மீதான பொது மக்களின் ஆர்வம் உயர்ந்துள்ளது. சேமிப்புத் திட்டம், அவரது ஆர்வத்தை நிறைவேற்றுவதற்குத் துணை புரியும்.

1  2  3