• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-03 09:33:18    
மங்கோலிய இன ஆயர்களின் புது வாழ்க்கை

cri

சீனாவின் உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் மேற்கு பகுதியில் உள்ள Oerhtossu நகரம், சீனாவில் மங்கோலிய இன மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் ஒன்றாகும். முன்பு, அப்பகுதி, புல் வளராத பாலைவனமாக இருந்தது. இயற்கைச்சூழல் மோசமாகவும் இயற்கை நிலை பலவீனமாகவும் இருந்தன. ஒப்பீட்டளவில் பொருளாதாரம் பின்தங்கிய நிலையில் இருந்தது. இன்றோ, இங்குள்ள மங்கோலிய இன ஆயர்கள், இயற்கைச்சூழலின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு இயற்கைச்சூழல் உருவாக்கத்தில் உற்சாகமாக ஈடுபட்டு, சூழலை மேம்படுத்தியுள்ளனர். அதே வேளையில், கால் நடை வளர்ப்புத் தொழில் மூலம் அவர்கள் வளமடையும் பாதையில் நடைபோடுகின்றனர். அண்மையில் எமது செய்தியாளர், மங்கோலிய இனக் கிராமமான மெங்க் சிங் கிராமம் சென்று, அங்கு வாழும் மங்கோலிய இன மக்களின் உற்பத்தி வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நேரில் கண்டுள்ளார்.

Oerhtossu நகரின் மத்திய மற்றும் தென் பகுதியில் அமைந்துள்ள இக்கிராமத்திற்கு செல்லும் வழி நெடுகிலும் பசுமையான தாவரங்கள் ஆயர்களின் வீடுகளின் முன்புறத்திலும், பின்புறத்திலும் வளர்கின்றன.

கிராமத்துக்கு வந்ததும், ஆயர் Xiaoselin லோரி ஒன்றில் நிறைய மக்காச் சோள தண்டுகளை ஏற்றி வைத்து மாடு வளர்ப்பு இடத்துக்கு அனுப்ப இருந்தார். எங்களைப் பார்த்ததும், எங்களை அவரது வீட்டிற்கு வரவேற்றார். பால் உணவுகளை அளித்து எங்களை உபசரித்தார். வீட்டில் உள்ள வண்ணத்தொலைக்காட்சி பெட்டி, VCD, செல்லிடப்பேசி, வீட்டுக்கு வெளியேயுள்ள உந்துவண்டி ஆகியவற்றைக் கண்டு, வியப்படைந்ததாக செய்தியாளர் கூறினார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இங்குள்ளவர்கள் வெளியுலகத்துடன் தொடர்பில்லாமல் வாழ்ந்ததை எவரும் நினைத்துப்பார்க்க முடியாது என்றார், செய்தியாளர்.

1  2  3