
இங்கு வருவதற்கு முன்பு, Oerhtossu நகரின் Ijinhuoluo மாவட்டத்திலுள்ள மெங்க் சிங் கிராமம் பின்தங்கிய நிலையில் இருந்ததை எமது செய்தியாளர் கேள்விபட்டார். அங்கு மின்வசதியும் தொலைத்தொடர்பு வசதியும் இல்லை. வெளியே போகும் வழியும் கிடையாது. குதிரை, மிகச்சிறந்த போக்குவரத்து கருவியாக இருந்தது. இம்மாவட்டத்தின் துணை பிரச்சார அமைச்சர் Wang Ping செய்தியாளரிடம் கூறியதாவது:
"முன்பு, மெங்க் சிங் கிராமம், அடிப்படையில் வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ளாத இடமாக இருந்தது. அதாவது, இவ்விடத்தில் புல் பண்ணையில், வறட்சி ஏற்பட்டு, தாவர போர்வை சீர்குலைந்து விட்டதால், வெளியே போகும் வழி இல்லாமல் இருந்தது. ஆகையால், நடப்பு தவிர, குதிரை சவாரி செய்வது வழக்கம். பாதை கட்டப்பட்டிருந்தது. ஆனால், முன்பு இயற்கையான கால்நடை வளர்ப்புத்தொழில் இயற்கைச் சூழலைச் சீர்குலைத்ததால், கட்டியமைக்கப்பட்ட பாதை, வசந்த காலத்தில் ஓரிரு முறை காற்று வீசிய பின் சீர்குலைந்து விட்டது" என்றார்.
இந்நிலைமையை முற்றுமுழுதாக மாற்றும் பொருட்டு, நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, மெங்க் சிங் கிராமத்தின் நிலைமையை மேம்படுத்த, உள்ளூர் அரசு முடிவு செய்துள்ளது. முதலில், தாவர போர்வையை மீட்பதில் ஆயர்களுக்கு உதவி வழங்கப்பட்டது. அதே வேளையில், எங்கும் கால்நடைகளை மேயக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. கால்நடைகளை தொழுவத்தில் வளர்க்க ஊக்கம் தரப்பட்டது. இவ்வடிப்படையில், பாதை, மின்வசதி, நீர்வள வசதி ஆகியவை உருவாக்கப்படுவதில் ஆயர்களுக்கு உதவி வழங்கப்பட்டது.
1 2 3
|