• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-03 09:33:18    
மங்கோலிய இன ஆயர்களின் புது வாழ்க்கை

cri

இந்நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்த சற்றுப்பின்னரே, இக்கிராமத்தின் சூழலில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, ஆயர் Xiao Se Lin மகிழ்ச்சியுடன் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

கால்நடைகள் தொழுவத்தில் வளர்க்கப்படுவதற்கு முன், புல்தரை அவ்வளவு நன்றாக இருக்கவில்லை. பின்னர், புல்தரை ஓங்கி வளர்கின்றது. பாலைவனமும் பசுமையாக காணப்படுகின்றது. முன்பு போக்குவரத்து வசதியாயில்லை. மின்வசதி கிடைக்காத படியால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டுரசிக்க முடியவில்லை. செல்லிடப்பேசி இல்லை. கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு துறைகளிலும் வாழ்க்கை நிலை மேம்பட்டுள்ளது. ஆயர்களின் வாழ்க்கை வளமடைந்துள்ளது. இப்போது ஒவ்வொரு குடும்பத்துக்கு ஆண்டுதோறும் முப்பது அல்லது நாற்பது ஆயிரம் யுவான் வருமானம் கிடைப்பதாக அவர் கூறினார்.

துவக்கத்தில், சில முதியவர்கள், பாரம்பரிய மேய்ச்சல் வளர்ப்புச்சிந்தனை காரணமாக, தொழுவத்தில் கால்நடைகளை வளர்க்க விரும்பவில்லை. ஆனால், தொழுவ வளர்ப்புக்குப் பின், புல்தரை ஆண்டுக்காண்டு பசுமையாகி வருவதைக் கண்டு, அவர்கள் சுயமாகவே தொழுவத்தில் கால்நடைகளை வளர்க்கத் துவங்கியுள்ளனர்.

1998ம் ஆண்டுக்கு முன், மெங்க் சிங் கிராமத்தில் பள்ளிக்கூட படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய குழந்தைகள் அநேகர். சில குழந்தைகள், பள்ளி வயது அடைந்த போது, குடும்ப இன்னல் காரணமாக பள்ளிக்குப் போக முடியவில்லை. இப்போது, இக்கிராமத்தில் போக்குவரத்து வசதியாக உள்ளது. ஆயர்களின் வருமானம் அதிகரித்துள்ளது. ஆயர்களிடையே கல்வி கற்கும் விகிதமும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, மெங்க் சிங் கிராமத்தில் பத்து பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளனர்.

படிப்பு மூலம் ஆயர்களின் கல்வியறிவு விரிவாகி, சிந்தனை, கருத்து மற்றும் வாழ்க்கை முறையில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. Ijinhuoluo மாவட்ட துணை பிரச்சார அமைச்சர் Wang Ping செய்தியாளரிடம் பேசுகையில்,

"கடந்த இரண்டு ஆண்டுகளில், மெங்க் சிங் கிராமத்துக்குப் போனேன். இயற்கை நிலைமை, அடிப்படை நிர்மாணம், ஆட்களின் சிந்தனை-கருத்து எல்லாம், முன்பு இருப்பதை விட பெரிதும் வித்தியாசம். இப்போது, கிராமத்திலுள்ள ஆண், பெண், வயது வந்தவர், குழந்தைகள் அனைவரும் மிகவும் பரபரப்பாக உள்ளனர். தற்போது, அவர்கள் உற்சாகம் மிகுந்து வாழ்கின்றனர். வாழ்க்கை இலக்கும் மேம்பட்டுள்ளது. கடந்த காலத்தில், அனைத்து குடும்பங்களின் பண்பாட்டு வாழ்க்கை மது குடிப்பது தவிர வேறு ஏதுமில்லை. நாள்தோறும் மயக்கம் அடையும் அளவுக்கு ஆண்கள் மது குடித்து விட்டனர்" என்றார், அவர்.

கிராமவாசிகளின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டதுடன், பண்பாட்டு வாழ்க்கையும் வளமடைந்துள்ளது. ஓய்வு நேரத்தில் கிராமத்திலுள்ள ஆயர்கள் ஒன்றுகூடி, பாடுகின்றார்கள், இசைக் கருவி இசைக்கின்றனர். இந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மூலம் அவர்கள் மகிழ்கின்றனர்.

இப்போது மெங்க் சிங் கிராமத்தின் ஆயர்கள், இணக்கமான இன்பமான வாழ்க்கை நடத்துகின்றனர். இப்போது Ijinhuoluo மாவட்டம் உள்ளிட்ட, மங்கோலிய இன மக்கள் குழுமிவாழும் பிரதேசங்கள் எங்கும் இவ்வாறு காணப்படலாம். இப்போது வறுமை இங்கிருந்து மலையெறி விட்டது. புதிய வளர்ச்சிப்பாதையில் ஆயர்கள் வளமான வாழ்க்கை நடத்துகின்றனர்.


1  2  3