• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-10 17:10:55    
தாஜிக் இன மக்களின் நாட்டுப்பற்று உணர்வு

cri

தாஜிக் இனத்தவர்

வட மேற்கு சீனாவின் பெமீர் பீடபூமியில், "பெமீர் கழுகு" எனப்பாராட்டப்படும் தாஜிக் இன உடன்பிறப்புகள் வாழ்கின்றனர். சீனாவின் 55 சிறுபான்மை தேசிய இனங்களில் இவ்வினம் ஒன்றாகும். தாஜிக் இன மக்கள் நாட்டுப்பற்றுணர்வுடன் எல்லையைக் காவல் புரிவது புகழ்ந்து போற்றப்படுகின்றது.

"பெமீர் பீடபூமியின் Tashikuerganயிலுள்ள தாஜிக் தன்னாட்சி மாவட்டம், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், தாஜிக்ஸ்தான் ஆகிய மூன்று நாடுகளை ஒட்டியமைந்துள்ளது. நீண்டகாலமாக, இங்கு வசித்து வரும் தாஜிக் இன உடன்பிறப்புகள், நாட்டுப்பற்றுள்ள பாரம்பரியங்களை நிலைநிறுத்தி, எல்லைக்காவல் படைக்கு உதவியாக, தாய்நாட்டின் எல்லைப் பகுதியில் ஊன்றி நின்று, தமது ஊரைப் பாதுகாத்துள்ளனர்."

எமது செய்தியாளர், Tashikuergan மாவட்டத்தில், அங்குள்ள சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டு தலைவர் Moni Tabiliddyயை பேட்டி கண்ட போது, இது பற்றி அவர் கூறியதாவது:

"கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக, எல்லையைப் பாதுகாப்பதே, தாஜிக் இன மக்கள் நாட்டிற்கு வழங்கும் மிகப் பெரிய பங்களிப்பாகும். தாஜிக் இன மக்களுக்கு வலுவான நாட்டுப்பற்று எழுச்சி உண்டு. அவர்கள் தாய்நாட்டையும் ஊரையும் நேசிக்கின்றனர். தாய்நாட்டை விட்டுச் செல்வோர் எவருமில்லை. எல்லைக்காவல் ரோந்துக் குழுவுடன் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைத்து, நாட்டின் எல்லைக்காவல் கோட்டை பாதுகாக்கின்றனர்." என்றார்.

1  2  3