
தாஜிக் இன மங்கைகள்
Tashikuerganஇல் பூமி நிலை சிக்கலானது. எல்லைகோடு நீண்டது. எல்லை காவல் படையினரின் எண்ணிக்கை வரம்புக்குட்பட்டது. 800 கிலோமீட்டருக்கு மேலான நீளமுடைய எல்லை கோட்டிலுள்ள பல பத்து பாதைகளிலும் எந்நேரத்திலும் காவல் படையினர் கடமை புரிவது என்பது சாத்தியமில்லை. கடந்த பல்லாண்டுகளில் இங்கு மேய்ச்சலில் ஈடுபடும் தாஜிக் இன ஆயர்கள், சுயமாகவே எல்லையை பாதுகாப்பதில் எல்லைக்காவல் படைக்கு உதவி அளித்துள்ளனர். ரோந்து படை, இன்னல்களைச் சந்திக்கும் போதெல்லாம், தாஜிக் இன ஆயர்கள் முன்வந்து இன்னல்களை தீர்க்க உதவுகின்றனர். இங்கு வாழும் தாஜிக் இன ஆயர்களின் குடும்பங்கள், காற்று மற்றும் உறைபனியால் தடுக்கப்பட்ட எல்லை காவல் படையினர்களை தங்களது வீடுகளில் தங்கச் செய்து, சொந்த ஓட்டகங்கள், யாக் எருதுகளைக் கொண்டு, காவல் படைக்காக பொருட்களை அனுப்பியுள்ளனர். பலர், காவல் படைக்கு வழிகாட்டியாக சேவை புரிந்துள்ளனர். ரோந்து படைக்கு வழிகாட்டியவர்களில் Bayak முதியோர் குடும்பத்தினர்கள், அசல் உதாரணமாகத் திகழ்கின்றனர்.
எமது செய்தியாளர், Tashikuerganஇல் தொண்டராக, எல்லைக்காவல் படைக்கு வழிகாட்டியாக 30 ஆண்டுகள் கடமைபுரிந்துள்ள Bayakஐக் கண்டார். 57 வயதான அவர், பார்ப்பதற்கு உடல் வலிமையானவர். அவருடன் பேசுகையில் அவர் பல முறை மரண விளிம்பில் இருந்திருப்பதாக அறிந்தார். செய்தியாளரின் கோரிக்கைக்கிணங்க, வழிகாட்டியாக இருந்த போது, தமது தலையில், காலில், முதுகில் பட்ட காயத்தை அவர் காண்பித்தார்.
1994ம் ஆண்டில் எல்லை ரோந்து படைக்கு வழிகாட்டியாக கடமை புரிந்த போது இக்காயம் ஏற்பட்டதாகச் சொன்னார். அப்போது Bayak கடும் காயமுற்றார். வீடு திரும்புமாறு போராளிகள் அவரை வற்புறுத்தினர். ஆனால், அவர் கேட்கவில்லை. ஏனெனில், இப்பாதையில் போராளிகள் ரோந்து செய்வது, மிகவும் கடினம். தாம் வழிகாட்டியாக இருக்கும் போது, அவர்களின் இன்னலைக் குறைக்க முடியும் என முதியோர் புரிந்து கொண்டு, இந்த ரோந்து கடமை நிறைவேறும் வரை அவர் வீடு திரும்பவில்லை. 15 நாட்களுக்குப் பின், மலையிலிருந்து இறங்கிய பின்னரே, அவர் மருத்துவ மனைக்குச் சென்றார். இம்முறை, அவரது காலில் காயமுற்றது. பின்விளைவும் கடுமையானது. அவ்வப்போது ஏற்படும் வலியினால், Bayakஇன் இயல்பு வாழ்க்கையும் உழைப்பும் பாதிக்கப்படுகின்றன. இவற்றில் மிக கடுமையானது, மலைச்சரிவு விபத்தில் அவர் சிக்கிக்கொண்டதாகும். அப்போது, அவரது தலையை விட பெரிய கல் ஒன்று, அவரின் தலையைக் குறிதவறாமல் தாக்கி, அவர் மயக்கமடைந்தார். முதல் உதவி மற்றும் சிகிச்சை மூலம் அவர் குணமடைந்தார். செய்தியாளரின் கோரிக்கையின் படி, முதியோர் தலையிலிருந்த தொப்பியை எடுத்து தலையிலுள்ள காயத்தைக் காண்பித்தார்.
1 2 3
|